செவ்வாய், 26 அக்டோபர், 2010

பெ‌‌ரியாறு ‌விவகார‌ம்: கலைஞர் ஆலோசனை

மு‌ல்லை‌ப் பெ‌ரியாறு அணை ‌விவகார‌த்தில் மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டிய அடு‌த்த க‌ட்ட நடவடி‌க்கைக‌ள் கு‌றி‌த்து முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி அ‌திகா‌ரிகளுட‌ன் ஆலோசனை மே‌ற்கொ‌ண்டா‌ர்.
மு‌ல்லை‌ப் பெ‌ரியாறு அணை‌யி‌ன் ‌நீ‌ர்ம‌ட்ட‌த்தை உ‌ய‌ர்‌த்துவது ப‌‌ற்‌றி முடிவு எடு‌க்க உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தா‌ல் அமை‌க்க‌ப்ப‌ட்ட ஐவ‌ர் குழு கட‌ந்த வார‌ம் டெ‌ல்‌லி‌யி‌ல் கூடி ‌விவா‌தி‌த்தது.
அ‌ப்போது, மு‌ல்லை‌ப் பெ‌ரியாறு அணையை உடை‌க்கு‌ம் அ‌திகார‌ம் ‌த‌ங்களு‌க்கு இரு‌ப்பதாக கேரள அரசு, குழு‌வி‌ன் தலைவ‌ர் ‌நீ‌திப‌தி ஏ.எ‌ஸ்.ஆன‌ந்‌‌திட‌ம் தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தது.
இதனை‌த் தொட‌ர்‌ந்து அணையை டிச‌ம்ப‌ர் மா‌த‌ம் 17, 18, 19 ஆ‌கியே தே‌திக‌ளி‌ல் நே‌‌ரி‌ல் செ‌ன்று ஆ‌ய்வு செ‌ய்யவு‌ம் அ‌க்குழு முடிவு செ‌ய்‌திரு‌ந்தது.
இ‌ந்‌நிலை‌யி‌ல் மு‌ல்லை‌ப் பெ‌ரியாறு அணை ‌விவகார‌த்‌தி‌ல் மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டிய அடு‌த்த க‌ட்ட நடவடி‌க்கை கு‌றி‌த்து முடிவு எடு‌க்க செ‌ன்னை கோபாலபுர‌த்‌தி‌ல் உ‌ள்ள முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌யி‌ன் இ‌ல்ல‌த்‌தி‌ல் அ‌திகா‌ரிக‌ள் கூடி ஆலோசனை நட‌த்‌தின‌ர்.
ஐவ‌ர் குழு‌வி‌ல் த‌மி‌ழ்நாடு அரசு ‌பி‌ர‌தி‌நி‌தியாக இ‌ட‌ம் பெ‌ற்று‌ள்ள உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற மு‌ன்னா‌ள் ‌நீ‌திப‌தி ஏ.ஆ‌ர்.ல‌ட்சுமண‌னு‌ம் கல‌ந்து கொ‌ண்டு கட‌ந்த வார‌ம் டெ‌ல்‌லி‌யி‌ல் நடைபெ‌ற்ற கூ‌ட்ட‌த்தி‌ல் எடு‌க்க‌ப்ப‌ட்ட முடிவுகளை ‌விள‌க்‌கியு‌ள்ளார்.
மேலு‌ம் அணையை உடை‌க்கு‌ம் உ‌ரிமை த‌ங்களு‌க்கு இரு‌ப்பதாக கேரளாக கூ‌றி‌யிரு‌ப்பது ப‌ற்‌றி கூ‌ட்ட‌த்‌தி‌ல் ‌விவா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கருத்துகள் இல்லை: