![]() |
![]() |
மின்னம்பலம் - vanangamudi : அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே’ என்ற கண்ணதாசனின் பாடலை பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
பாடலைப் பாடும்போதே புரிந்தது.. அண்ணன் கலாநிதி மாறனுக்கு தம்பி தயாநிதி மாறன் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்தான் என்பது.
காலாநிதி- தயாநிதி விவகாரத்தில் என்னதான் நடக்கிறதாம்?
கலாநிதி மாறனுக்கு எதிரான தயாநிதி மாறனின் திடீர் லீகல் நோட்டீஸ், அதில் குறிப்பிட்டிருந்த கடுமையான குற்றச்சாட்டுகள் அனைத்துமே திமுகவின் மூத்த தலைவர்களையும் சக எம்.பி.க்களையுமே கடும் அதிர்ச்சி அடையவைத்துள்ளதாம். தயாநிதி மாறன் இவ்வளவு வேகமாக, காட்டமாக செயல்பட்டிருப்பது முரசொலி மாறன் குடும்பதையுமே ரொம்ப அதிர்ச்சி அடைய வைத்துவிட்டதாம். Digital Thinnai Delhi in the background
தயாநிதிக்கு மிக நெருக்கமான நண்பர்களும் கூட, “ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார்?” என அதிர்ச்சியும் ஆச்சரியமுமாகவே கேட்கின்றனராம்.
Digital Thinnai Delhi in the background
கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் இவ்வளவு கடுமையான வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதன் பின்னணி பற்றி தயாநிதியின் நண்பர்கள் வட்டாரங்களில் நாம் கேட்ட போது. ” தயாநிதி கொஞ்ச நாளாகவே மன உளைச்சலில்தான் இருக்கிறார்.
திமுகவிலும் தமக்கு பெரிய மரியாதை இல்லைன்னு நினைக்கிறார். மத்திய சென்னை மக்களவைத் தொகுதி எம்.பி.யாக இருந்தாலும் கூட அந்த தொகுதிக்குட்பட்ட மாவட்ட செயலாளர் அமைச்சர் சேகர்பாபு, தயாநிதியை மதிப்பதே கிடையாதாம்.
பொதுவாக திமுகவில் புறக்கணிக்கப்படுகிறோம் என்பதுதான் தயாநிதியின் வேதனையாம். சில நேரங்களில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் மட்டும் போய் சில உதவிகளை கேட்பார் தயாநிதி. அவ்வளவுதான். இப்படி கட்சியிலும் மரியாதை இல்லை. குடும்பத்திலும் தமக்கு வர வேண்டிய பங்குகள் முறையாகவும் முழுமையாகவும் கிடைக்கவில்லை என்பதால்தான் இப்படி லீகல் நோட்டீஸ் என தடலாடியாக வேற லெவலுக்கு இறங்கிவிட்டார்” என்கின்றனர்.
Digital Thinnai Delhi in the background
இந்த பிரச்சனையில் கலைஞரைப் போல முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, “குடும்ப பிரச்சனையை பெரிசாக்க வேண்டாம். நான் பேசுகிறேன்” என தயாநிதியிடம் கூறினாராம். இந்த பேச்சுவார்த்தையின் போது, தயாநிதியிடம் “முதல்வராகவும் கட்சித் தலைவராகவும் கூட சொல்கிறேன்” என சமாதானப்படுத்த முதல்வர் ஸ்டாலின் முயற்சித்திருக்கிறார்.
முதல்வர் ஸ்டாலினின் முயற்சிகளைத் தொடர்ந்து, தயாநிதி மாறனுக்கு ரூ.2,000 கோடி தர கலாநிதி மாறன் முன்வந்தாராம். ஆனால், தயாநிதி மாறன் இது மிகவும் குறைவான தொகை என ஏற்க மறுத்தாராம்.
அப்போதும் கூட முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, “கலாநிதியிடம் பேசி கூடுதலாக ரூ.500 கோடி தர சொல்கிறேன்” என்று சொல்லி இருக்கிறார். இதையும் ஏற்க மறுத்த தயாநிதி மாறன், இப்போது அனைவரையும் மீறி கடுமையான குற்றச்சாட்டுகளுடன் கலாநிதி மாறனுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இதுதான் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது” என்கின்றனர்.
திமுக தலைவர், முதல்வர் ஸ்டாலினின் சமாதான முயற்சிகளை மீறி இப்போது கலாநிதி மாறனுக்கு நோட்டீஸ் அனுப்பியதால் அவருக்கு திமுகவில் இனி எதிர்காலம் இல்லை என்றாகிவிட்டது.
இப்படி “திமுகவிலும் எதிர்காலம் இல்லாமல், முதல்வர் ஸ்டாலின் கோபத்துக்கும் உள்ளாகி, குடும்பத்திலும் ஆதரவு இல்லாமல் இருக்கும் தயாநிதி மாறனுக்கு அப்படி யார்தான் பெரிய அளவில் ஆதரவு தருகிறார்கள்?” என்றும் தயாநிதி மாறனுக்கு நெருக்கமான வட்டாரங்களில் நாம் கேட்டோம்.
இதற்கு, “எங்களுக்கும் தெரியலைதான். ஆனால் ‘டெல்லி’யில் இருந்து சிலர் தயாநிதி மாறனை இயக்குவது போல தெரிகிறது” என பூடகமாக சொல்கின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் எவ்வளவோ முயற்சித்தும் பிரச்சனை வேண்டாம் என எச்சரித்தும் பிடிகொடுக்காமல் தயாநிதி மாறன் லீகல் நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் இப்போது பங்கு சந்தை விவகாரங்களுக்கான அமைப்பான செபியிடம் போயிருக்கிறது. செபிதான், மேலிட உத்தரவு வந்தால் அமலாக்கத்துறைக்கு ஃபைல்களை அனுப்பி வைக்குமாம்.
Digital Thinnai Delhi in the background
தயாநிதி மாறனின் நண்பர்களிடம், “திமுகவில் முக்கியமானவர் தயாநிதி. 22 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விவகாரங்களை இப்போது இவ்வளவு கடுமையாக கையில் எடுத்திருக்கிறார்.
அதுவும் அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இப்படி நாமே குடும்பத்துக்குள் பிரச்சனை செய்தால், தேர்தலில் திமுகவை இது பாதிக்கும் என அவருக்கு தெரியாதா?” என கேட்டால் “அதுதான் தெரியலையே” என ஆதங்கப்படுகின்றனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக