Arun Siddharth - அருண் சித்தார்த் i : புலிகளின் துணுக்காய் சித்திரவதை முகாம் தொடர்பாக UTHR-J (University Teachers For Human Rights- Jaffna ) மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் - யாழ்ப்பாணம் எனும் அமைப்பு வெளியிட்ட அறிக்கை இது.
இந்த அமைப்பு யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர்களான தயா சோமசுந்தரம், ராஜன் ஹூல் , கோபாலசிங்கம் சிறிதரன் மற்றும் ராஜனி திரணகம ஆகியோரால் உருவாக்கப்பட்டு இலங்கையின் பல பாகத்திலும் உள்ள பல்கலைக்கழக பேராசிரியர்களின் பங்களிப்புடன் இலங்கையில் யுத்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தி வெளியுலகுக்கு கொண்டு வந்த சர்வதேசி ரீதியில் கீர்த்தி மிக்க நம்பகமான அமைப்பென ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சுயாதீன அமைப்பாகும்.
இந்த அமைப்பின் உறுப்பினர்களான பேராசிரியர் ராஜன் ஹூல், மற்றும் கோபாலசிங்கம் சிறிதரன் ஆகிய இருவருக்கும் Martin Ennals Award for human rights எனும் சர்வதேச விருது வழங்கப்பட்டது.
இலண்டனைத் தளமாக்க் கொண்டியங்கும் உலகப் புகழ்பெற்ற மனித் உரிமை அமைப்பான சர்வதேச மன்னிப்புச் சபையின் இயக்குநராக 1968 முதல் 1980 வரை இயங்கிய Martin Ennals - மார்டின் ஏர்னல்ஸ் என்பவரின் பெயரில் மனித உரிமை பாதுகாவலர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது 2007 ஆம் ஆண்டு இவர்களுக்கு வழங்கப்பட்டது.
இவ்வாறு சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் புலிகளின் “துணுக்காய்” சித்திரவதை முகாம் பற்றி இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருப்பதை எவ்வாறு மறுக்க அல்லது மறைக்கப் போகின்றீர்கள்.??
Source - UTHRJ: Report9, Chapter 3





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக