![]() |
Vimalaadhithan Mani : நடுநிலையாளர்கள் மீதும் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் அதிகாரத்துக்கு சொம்பு தூக்காத
உண்மையான திமுக அபிமானிகள் மீதும் கொலைவெறியுடன் இணையத்தில் உலாவரும் பொறுப்பில் இருக்கும் திமுக தம்பிகளா !!!
சகட்டுமேனிக்கு பேசி எதிர்கருத்து வைப்பவர் மீது இணையத்தில் பொங்கும் முன் தென்னிந்திய பிராமணர் அல்லாதோர் நல சங்கமாக ஆரம்பித்து நீதி கட்சியாக மாறி பின் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்து திராவிடர் கழகமாக மாறி பின் அண்ணாவின் தேர்தல் அரசியல் கனவுக்கு செயல் வடிவம் கொடுக்க திமுக உருவானது என்ற நீண்ட நெடிய கழக வரலாற்றை படியுங்கப்பா.
தமிழக முதல்வர் திரு முக ஸ்டாலின் அவர்களின் அனைவரையும் அரவணைத்து செல்லும் அரசியலே அரசியல் சக்ர வியூகங்களை தகர்க்கும் வழி.
கலைஞர் உங்களை போன்று கண்மூடித்தனமாக தன் சித்தாந்த எதிரிகள் மீது பாயவில்லை. தன் அறிவால், புத்தி சாதுர்யத்தால் மட்டுமே தன் அரசியல் எதிரிகளை வென்றார். கலைஞரின் அரசியல் ராஜதந்திரங்களை பற்றி ஆழ படியுங்கள். பிடி தியாகராசர், நடேச முதலியார், DM நாயர், அயோத்திதாச பண்டிதர், ரெட்டை மலை ஸ்ரீனிவாசன், பெரியார், அண்ணா, மொழிபோர் தியாகிகள் போன்ற கழக முன்னோடிகள் மற்றும் வழிகாட்டிகளின் வரலாற்றை படியுங்கள். திராவிட மாடல்னா என்னன்னு புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க தம்பிகளா !!!
கழக வரலாறும் தெரியாது, கொள்கையும் தெரியாது. ஆனா கழகத்துக்கு எதிரா பேசினா அடிப்பேன்னு நீங்க நின்னீங்கன்னா உங்களை ஒரு கூலிபடையாக மட்டும்தான் பார்க்க முடியும். உண்மையான அறிவார்ந்த திராவிட கொள்கைகளால் புடம் போடபட்ட செயல் வீரர்களாக எல்லாம் உங்களை பார்க்க வாய்ப்பு இல்லை ராஜா, வாய்ப்பே இல்லை😎😎😎.
எஸ்தர் டாப்லா, ஜான் ட்ரீஸ், ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன், ஜெயரஞ்சன் போன்ற நடுநிலையான நிபுணர்களால் வழி நடத்தப்படுவது கழக அரசு. ஆனால் அறிவென்பது மருந்துக்கும் கூட இல்லாத பாசிச வெறி பிடித்த சங்கிகளுக்கும் உங்களுக்கும் வித்தியாசமே இல்லைனு நினைக்கும் அளவுக்கு எல்லை மீறி போய்கிட்டு இருக்கு நடுநிலையாளர்கள் மீதான உங்கள் வார்த்தை போர்.
உங்களோட இந்த ஓவர் ஆணவம் கட்சிக்கு நல்லதே இல்லை 😎😎😎.
தம்பிகளா !!!
சமூக வலைதளங்களில் கலைஞரின் சாதனைகளை பற்றி, திமுக அரசின் சாதனைகளை பற்றி புள்ளிவிவரங்களுடன் விளக்கி என்னை போன்ற கழகத்தின் அபிமானிகள் பக்கம் பக்கமாக எழுதி இருக்கும் பதிவுகளை போல எதுவும் நீங்க இதுவரை எழுதி கிழித்து விடவில்லை.
முதலில் கலைஞரின் சாதனைகளை, இந்த அரசின் சாதனைகளை பற்றி முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள், பிறகு தயவு செய்து கலைஞரின், இந்த அரசின் சாதனைகளை பற்றியும், திராவிட மாடல் பற்றியும், சமூக நீதி பாதுகாப்பு போன்ற திராவிட கொள்கைகளையும் பற்றியும் தீவிரமாக சமூக வலைதளங்களில் எழுத ஆரம்பியுங்கள். வெறுமனே பதவிகளை வாங்கிக்கொண்டு வேடிக்கை பார்க்க உங்களை திமுகவின் பொறுப்பாளர்களாக கட்சி தலைமை நியமிக்கவில்லை என்பது உங்கள் நினைவில் இருந்தால் நல்லது.
கழகத்தின் அடுத்த தேர்தல் வெற்றி வாய்ப்பை கெடுக்கும் வகையிலான உங்கள் வாய் பேச்சை குறைத்து நிறைய படிக்க ஆரம்பியுங்கள். 2026 தேர்தலை வென்றெடுக்க, கட்சியை வளர்த்த அது ஒன்றே வழி
பழுத்த பரம்பரை திமுககாரரான உங்களுக்கே இந்த நிலைமையா?
எந்த ஒரு இரும்பு கோட்டையையும் தகர்த்து விடும் வல்லமை ஜாலராக்களுக்கு உண்டு.
எவ்வளவு நல்ல திட்டங்களை அமுல் படுத்தினாலும்,
கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால்
விளைவுகள் விரும்பும் அளவுக்கு இருக்காது. .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக