செவ்வாய், 15 ஏப்ரல், 2025

தமிழ்நாடு மாநில சுயாட்சி தீர்மானம் சட்டமன்றத்திற்கு இன்று வருகிறது

 tamil.news18.com = l akshmanan G : 5 நாட்களுக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொண்டு வருகிறார்.
தமிழ்நாட்டுக்கான நிதிஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துவருவதாக திமுக கூட்டணிக் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
சட்டப்பேரவையில் கடந்த 25-ஆம் தேதி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில சுயாட்சியை உறுதிசெய்து மாநில உரிமைகளை நிலைநாட்டக் கூடிய வகையில், விரைவில் புதிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்திருந்தார்.



இந்நிலையில், 5 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இதில், மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவருகிறார்.

மாநிலத்துக்கு அதிகஅதிகாரம் வழங்கும் வகையிலான இந்த தீர்மானத்தை, உறுப்பினர்களின் விவாதத்துக்குப் பிறகு நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை: