ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களும் சட்டமானது.. தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு

 tamil.oneindia.com  - Mani Singh S :  சென்னை: தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களை கிடப்பில் போட்டு, குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் ஆர் என் ரவி அனுப்பியது தவறானது என்று கூறிய உச்ச நீதிமன்றம், கிடப்பில் இருந்த 10 மசோதாக்களையும் நிறைவேற்றி உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஆளுநர் ஆர் என் ரவி நிறுத்தி வைத்த 10 மசோதாக்களும் சட்டமானதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
10 மசோதாக்களும் சட்டமானதால் துணைவேந்தர் நியமன அதிகாரம் மாநில அரசின் வசமானது.


தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர் என் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது. இதன் எதிரொலியாக தமிழக சட்ட சபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டபடி இருந்தார். இதனால் தமிழ்நாடு அரசு, ஆளுநர் இடையே சுமூக உறவானது இல்லாமல் இருந்தது.
Tamil Nadu Government Governor Ravi Supreme Court
ஆளுநர் நடவடிக்கை சட்டவிரோதம்

தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடும் ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. குறிப்பிட்ட கால வரம்புக்குள் மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனு செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றிய பிறகு அந்த மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது தவறானது என்று கூறியது.

மேலும் 10 மசோதாக்களை கிடப்பில் போட்டது சட்ட விரோதம் என்றும், ஒருதலைபட்சமானது என்றும் கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 10 மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்து இருப்பதற்கு ஆளுநருக்கு வீட்டோ போன்ற அதிகாரம் ஏதேனும் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினர்.
10 மசோதாக்களை ஜனாதிபதி பரிசீலனைக்காக நிறுத்திவைத்த ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோதமானது. எனவே ஆளுநரின் அந்த நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது.
10 மசோதாக்களும் சட்டமானது

10 மசோதாக்கள் சட்டமன்றத்தால் மறுபரிசீலனை செய்யப்பட்ட பிறகு அவை மீண்டும் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து அந்த மசோதா அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும்" என்று அதிரடியாக தீர்ப்பளித்தது. தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டத் திருத்த (2-வது) மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்திருப்பதால், இந்த 10 மசோதாக்களும் சட்டமாவதாக தமிழ்நாடு அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அம்மசோதாக்களை அனுப்பிய 18.11.2023 தேதியில் ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் அளித்ததாக கருத வேண்டும் என அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது என்ற மசோதாவும் சட்டமாகியுள்ளது. இதனால் இனிமேல் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமிக்கும் அதிகாரம் தமிழக முதல்வர் வசமாகியுள்ளது.

இது தொடர்பாக அரசு செயலாளர் சி. ஜார்ஜ் அலெக்சாண்டர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;-
அரசிதழில் வெளியீடு

சட்டம் -பாகம் -2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் இராண்டாவது திருத்தச்) சட்ட முன்வடிவு (சட்டமன்ற பேரவை சட்ட முன்வடிவு எண் 48/2022) - தமிழ்நாடு சட்டம் 10/2024 என வெளியிட ஆணையிடப்பட்டது 18.11.2023 அன்று மாண்புமிகு ஆதரால் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்படுகிறது அறிவிக்கை வெளியிடப்படுகிறது. (அரசு ஆணை நிலை எண் 86 சட்ட துறை 2005, பங்குனி 28. குரோதி. திருவள்ளுவர் ஆண்டு-2056.) படிக்கப்பட்டது:

1. அரசாணை (நிலை) எண்.315 சட்டத்துறை தேதி 07.03.2024
2. 08.04.2025 தேதியிட்ட நீதிப்பேராணைடமைபில் எண்.1239/2023-ல் மாண்பமை
உச்சநீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட ஆணைகள்,

பின்வரும் அறிவிக்கை 1804.2025 தேதியிட்ட தமிழ்நாடு அரசு சிறப்பிதழில் ஆங்கில மற்றும் தமிழ் மொழிகளில் வெளியிடப்படுதல் வேண்டும்.

2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் இரண்டாவது திருத்தச்) சட்ட முன்வடிவு (சட்டமன்றப் போவை சட்ட முன்வடிவு எண்.48/2) அக்டோபர் 2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் போவையால் நிறைவேற்றப்பட்டு மாண்டிமிகு ஆளுநரின் ஒப்புகுலுக்காக அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது என்பதாலும் மற்றும் கூறப்பட்ட சட்டமுன்வடிவிற்கு 13 நவம்பர் 2023 அன்று மாண்புமிகு ஆளுநர் இசைவரிக்க மறுத்தார் என்பதாலும்

மற்றும் பாண்டிமிகு முதலமைச்சர் அவர்களால் 19.11.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முன்மொழியப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில் கூறப்பட்ட சட்டமுன்வடிவு மறுபரிசிலனை செய்யப்பட்டு எந்தத மாறுதலுமின்றி சட்டமன்றப் பேரவையில் மீண்டும் இயற்றப்பட்டது என்பதாலும்

மற்றும் கூறப்பட்ட சட்டமன்றப் போவை சட்டமுன்வடிவு எண் 48/2022 18.11.2023 அன்று மாண்புமிகு ஆளுநரிடம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டு, அந்தச் சட்டமுன்வடிவை 28.11.2003 அன்று பாண்டிமிகு குடியரசுத்தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பியிருந்தார் என்பதாலும்

மற்றும் மாண்மமிகு குடியரசுத்தலைவர் அவர்கள் கூறப்பட்ட சட்டமுன்வடிவிற்கு 18.02.2024 அன்று ஒப்புதல் வழங்கி 07.03.2004 தேதியிட்ட தமிழ்நாடு அரசு சிறப்பிதழின் பகுதி V இல் தமிழ்நாடு சட்டம் சட்டம் 10/2024 வெளியிடப்பட்டு மேற்கூறிய தேதியன்று, அதாவது, 07.01.2024 அன்று நடைமுறைக்கு வந்து விட்டது என்பதாலும்,
18.11.2023 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டதாக

மற்றும் மாண்பமை உச்சநீதிமன்றம் நீதிப்பேராணை மனு எண் 1239/2023 08.04.2025 தேதியிட்ட அதன் ஆணையில் மேற்கூறிய சட்டமுன்வடிவை மாண்புமிகு குடியாகத் தலைவருக்கு பரிசிலனைக்கு அனுப்பிய பிள்னர் மாண்டிமிகு குடியரசுத் தலைவர் எடுத்திருக்கக்கூடிய அனைத்து விளைவுறு நடவடிக்கைகளும் சட்டத்தின்படி இல்லா நிலையது என்றும் மேற்கூறிய சட்ட முன்வடிவு மறுபரிசிலனை செய்யப்பட்டு ஒப்புதலுக்காக மாண்புமிகு ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்பட்ட நாளில் அவரால் ஒப்பதல் அளிக்கப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது என்பதாலும்

எனவே தற்போது 08.04.2025 தேதியிட்ட மான்பபை உச்சநீதிமன்றத்தின் மேற்கூறிய ஆணையின் அடிப்பாடயில் கூறப்பட்ட சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண்.48/2022 ஆனது பாண்டி தமிழ்நாடு ஆளுதால் 18 நவம்பர் 2023 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்படுதல் வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: