செவ்வாய், 15 ஏப்ரல், 2025

மாநில சுயாட்சி களத்தை முதல்வர் ஸ்டாலின் கவனமாக அதேசமயம் மிக துணிவோடு திறந்து விட்டுள்ளார்!

 ராதா மனோகர் : தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சி தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்
ஆற்றிய உரை ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருப்பு முனையாகத்தான் எனக்கு தோன்றுகிறது!
வெறும் தேர்தல் அரசியலை தாண்டி உபகண்ட மாநிலங்களின் ஒட்டு மொத்த நலனையும் கருத்தில் கொண்டு அளந்து அளந்து எடுத்து வைக்கப்பட்ட வாதங்கள் மிக பெறுமதி வாய்ந்தவை
எவராலும் இலகுவில் கடந்து போக முடியாத காத்திரம் நிரம்பிய மாநில சுயாட்சி களத்தை இதன் மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து விட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினின் இந்த உரையை இந்திய ஒன்றிய மக்கள் மட்டுமல்லாது
முழு உலகிலும் உள்ள பல ராஜதந்திர மட்டங்கள்  கவனமாக செவி மடுத்திருக்கும் என்பதில் எனக்கு துளி கூட சந்தேகம் கிடையாது!  


மிக சரியான பாதையில் முன்னேற்றகரமான முதல்  அடியை  கவனமாக அதேசமயம் மிக துணிவோடு முன்னெடுத்துள்ள தமிழக அரசுக்கு எனது வாழ்த்துகள்!
ஜனநாயக விழுமியங்களை போற்றும் அனைவரும் உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்பார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்!

கருத்துகள் இல்லை: