Kalaignar Seithigal - Praveen : சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள A4 மருத்துவமனையை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா,சுப்பிரமணியன் திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
அதன் விவரம் :
தமிழ் மொழியில் மருத்துவ பாடபுத்தங்கள் மொழிபெயர்ப்பு பட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, "கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே மருத்துவ துறை சார்ந்த புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பாக இந்த பணிகள் நிறைவு பெற்றுள்ளது. முதலமைச்சர் மூலமாக அந்த புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் படித்த, 7.5% இட ஒதுக்கீட்டில் பயின்ற மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட இருக்கிறது. இன்னமும் கூடுதலான புத்தகங்கள் மொழிபெயர்க்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது பற்றிய அறிவிப்பை 21ஆம் தேதி நடைபெற இருக்கக்கூடிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்க இருக்கிறேன்"எனத் தெரிவித்தார்.
"3 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழில் மருத்துவ பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது"- அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
மருத்துவ மாணவர்கள் ஐந்து ஆண்டுகளும் தமிழில் படிக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, "அதில் நிறைய சட்ட சிக்கல்கள் உள்ளது. அதற்கான விதிமுறைகள் தளர்தாமல் உள்ளது. அதை எல்லாம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" என கூறினார்.
முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறை என்ற கேள்விக்கு, "மருந்துகள் பற்றாக்குறை இல்லை. முதல்வர் மருந்தகத்தில் 206 வகையான generic medicine விற்பனைக்கு வந்துள்ளது. கூட்டுறவுத் துறை சார்பாக நடத்தப்படுகிறது. மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக மருந்துகள் கொள்முதல் செய்து தரப்படுகிறது. இதைத் தாண்டி தேவைப்படும் Horlicks மற்றும் Boost உள்ளிட்ட பொருட்களை கடை நடத்துபவர்கள் அல்லது தனியார் மருத்தகம் நடத்தும் உரிமையாளர்கள் வாங்கி பெற்றுக் கொள்ளலாம் என்பது போன்ற உத்தரவை கூட்டுறவுத்துறை தெரிவித்திருக்கிறது.
முதல்வர் மருத்தகத்தில் 75 % மருத்துகள் விலை குறைவாக தான் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது வெறும் 206 வகையான generic medicine மட்டுமே விற்பனை செய்யப்படுதால் அது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. மேலும் இதில் மற்ற மருத்துகளை விற்பனை செய்ய கூட்டுறவு துறையிடம் பேசி வருகிறோம்"என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக