ராதா மனோகர் : சென்ற வாரம் பிரான்ஸ் தலைநகரில் லாச்சப்பல் என்ற இடத்தில வைத்து ஒரு தமிழ் பெண் ( மலையக பூர்வீகம்) மீது படுமோசமான தாக்குதல் மிரட்டல் முட்டை வீச்சு இடம்பெற்றது.
தாக்குதல் நடத்தியவர்கள் எலி ஆதரவாளர்கள்!
அந்த பெண் டிக் டாக்கில் இயக்கம் பற்றி பல சுதந்திர கருத்துக்களை கொஞ்சம் காரமாகவே தொடர்ந்து முன் வைத்திருக்கிறார்.
இதுவரையில் அந்த பெண்ணின் டிக் டொக் பற்றியோ அல்லது அவரை பற்றியோ தெரியாதவர்களுக்கும் இப்போது தெரியவந்துள்ளது
ஆயிரக்கணக்கில் அவருக்கு பின் பற்றாளர்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள்
இனி அவருக்கு இலட்சக் கணக்கான பின்பற்றாளர்கள் கிடைப்பார்கள்!
அந்த அளவுக்கு அவர் உலக அளவில் பிரபலமாகி விட்டார்
இப்போது கிடைத்திருக்கும் விளம்பரத்தை அந்த பெண் இனி ஆக்கபூர்வமான விடயங்களுக்கு பயன் படுத்தலாம்.
இவருக்கு கிடைத்திருக்கும் வெளிச்சம் சாதாரணமானது அல்ல.
இந்த வகையில் இவர் இந்த தாக்குதல் மூலம் கிடைத்த மன உளைச்சலை வெற்றி கொள்ளலாம்.
இதே போல தாக்குதல் மேற்கொண்ட காட்டுமிராண்டிகளும் பெரிய வெளிச்சத்த பெற்றுள்ளார்கள்
இவர்களின் பாசிசத்தை பற்றி எவ்வளவு விவரமாக எடுத்து சொன்னாலும் புரிய மறுப்பவர் கண்களை பாரிஸ் நகரத்தில் வைத்து திறந்துள்ளார்கள்!
இந்த வகையில் அந்த டிக் டொக் பெண்ணுக்குத்தான் வெற்றி!
பாரிஸ் லாச்சப்பல் வீரர்கள் நாகரீகம் அடைந்த நாட்டில் வாழ்ந்தும் கொஞ்சமும் பரிணாம வளர்ச்சி அடையவில்லை.
கருத்துக்களை கருத்துக்கள் மூலம் எதிர்கொள்ளுவதற்கு கொஞ்சம் அறிவு பண்பு போன்றவை தேவையாக இருக்கிறது.
தங்களுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்திற்காக அந்த நாட்டின் அமைதிக்கும் நாகரீர்கத்திற்கும் சவால் விட்டுள்ளார்கள்.
கருத்து சுதந்திரத்திற்காக உயிரை கொடுத்து போராடிய மகான்களின் நாடு அது.
அந்த பெண் பேசுவதை கேட்க பிடிக்காவிட்டால் கேட்கவேண்டாம்
அவரது பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்த இவர்கள் யார்?
புலம்பெயர் சமூக உளவியல் பற்றி இன்னுமொரு முக்கிய கோணத்தில் ஒரு விடயம் கவனத்தை பெறுகிறது.
அது மிகவும் பாரதூரமானது.
யாரவது தன் காதல் மனைவியை ஓட ஓட தெருவில் கோடாலியால் வெட்டினானா?
வீட்டின் பின்புறத்தில் வைத்து தன் காதல் மனைவியை துடிக்க துடிக்க வெட்டி கொன்றனா?
இப்படியான செய்திகள் வெளியான உடனேயே நமது புகழ் பெற்ற ஸ்டார்க்ஹோம் சின்ரோம் மனநோயாளிகள் கூட்டம் கருத்து சொல்ல தொடங்கிவிடும்!
குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில்.
அந்நோயாளிகளின் கருத்து உதாரணங்கள் சில : \
ஐயோ அவன் உண்மையில் நல்லவன்
எல்லோருக்கும் இரக்கத்தோட உதவி செய்ப்பவன்.
மனைவிமீது உண்மையில் நல்ல அன்பு கொண்டவன்!
குழந்தைகளிடம் ஆழமான பாசம் உள்ளவன்
எல்லாவற்றிலும் பார்க்க நேர்மையானவன்
அவன் ஒரு போதும் தவறே செய்யமாட்டான்
இதை வேண்டுமென்றே செய்திருக்க மாட்டான்
எதோ அவனை மீறி அவன் செய்திட்டான்
அதுக்காக அவனை பேசக்கூடாது
இதுமாதிரி மோசமான கொலையாளியை புகழ்ந்து
அவனுக்கு வயிட் வாஷ் பண்ணும் வேலையை ஆரம்பித்து விடுவார்கள்
இந்த கொலையாளியை போற்றுதும் குணம் எங்கிருந்து வந்தது?
சமூக உளவியல் ஆய்வாளர்கள் இந்த நோயை பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக