ஞாயிறு, 31 மார்ச், 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இந்தியாவே காரணம் என குற்றம்சாட்டிய சிறிசேன!!

 வீரகேசரி : முன்னாள் ஜனாதிபதியின் புதிய சகாவே இந்த குற்றச்சாட்டிற்கு காரணமா?,
 என அரசாங்கம் விசாரணை!
 முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிஐடியினரிடம் வாக்குமூலம் வழங்கிய வேளை,
 உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் பின்னணியில் இந்தியாவே உள்ளதாக தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள சண்டே டைம்ஸ்,
 மைத்திரிபால சிறிசேனவுடன் சமீபத்தில் இணைந்துகொண்டுள்ள நபர் ஒருவரே இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ளரா என அரசாஙகமட்டத்தில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளது
இது குறித்து சண்டேடைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது
கடந்தகாலங்களில் வெளியான விடயங்களை தலைகீழாக மாற்றும் விதத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரலாற்றை மாற்றியமைக்கும் விதத்தில்,
 புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.


உயிர்த்த ஞாயிறுதினத்திற்கு சில நாட்கள் இருக்கையில் அவர் இந்த புதிய தகவலை வெளியிட்டார். கண்டிக்கு கடந்த வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டவேளை தனக்கு உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து புதிய விடயங்கள் தெரியவந்துள்ளதை அவர் கோடிட்டுக்காட்டியிருந்தார்.

கண்டியில் தனது நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின்னர் அவர் ஊடகவியலாளர்களுடன் உரையாடினார் உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் பின்னணியில் யார் உள்ளது என்பதை தான் அறிந்துகொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அவர்கள் யார் என்பதை அவ்வேளை அவர் தெரிவி;க்கவில்லை.நான் நீதிமன்றத்தின் முன்னிலையிலேயே அதனை தெரிவிப்பேன் என தெரிவித்த மைத்திரிபால சிறிசேன இந்த தகவலின் மிக முக்கிய தன்மை காரணமாக தனக்கு மேலதிக பாதுகாப்பையும் கோரவுள்ளதாக குறிப்பிட்டார்.

கொழும்பில் சிறிசேன ஊடகங்களிற்கு பேட்டி வழங்குவதற்கான ஏற்பாடுகளை அவரின் இரண்டு உதவியாளர்கள் மேற்கொண்டிருந்தமை அவ்வேளையில் புலனாகியது.

சிறிசேனவின் இந்த தகவலிற்கு அதிகளவு முக்கியத்துவத்தை வழங்குவதே அவர்களின் நோக்கம்.

எனினும் இந்த தகவல் வெளியானதும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்ற அழுத்தங்களிற்குள்ளானார். குற்றச்செயல்கள்குறித்த விபரங்களை மறைத்தமைக்காக முன்னாள் ஜனாதிபதியை கைதுசெய்யவேண்டும் என சில தரப்பினர் வாதிட்டனர்.

பொலிஸ்மா அதிபர் ஊடாக மைத்திரிபால சிறிசேனவை விசாரணை செய்யவேண்டும் என்ற உத்தரவை அமைச்சர் பிறப்பித்தார்.

மிக முக்கியமாக முன்னாள் ஜனாதிபதி சிஐடிக்கு அழைக்கப்பட்டார் அவரின் வாக்குமூலம்பதிவு செய்யப்பட்டது.

ஐந்து மணிநேரத்திற்கு மேல் விசாரணைகள் இடம்பெற்றதாக பொலிஸ்வட்டாரங்கள் தெரிவித்தன.

உயிர்த்தஞாயிறு தாக்குதலி;ன் பின்னணியில் இந்தியா உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குமூலம் வழங்கியுள்ளார் என சண்டே டைம்சிற்கு தெரியவந்துள்ளது.

அவருக்கு எப்படி தெரியும்?

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து இந்திய இராஜதந்திரியொருவர் தனக்கு தெரிவித்தார் என்ன காரணங்களிற்காக அந்த தாக்குதல் இடம்பெற்றது என்பதையும் அவர் தெரிவித்தார் என சிஐடியினரிடம் தெரிவித்துள்ள சிறிசேன அந்த இராஜதந்திரியின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இந்தியா தனது அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கான அனுமதி வழங்கப்படாமையே இந்த தாக்குதலிற்கான காரணம் என அந்த இராஜதந்திரி தெரிவித்தார் என சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

உதாரணத்திற்கு மத்தல விமானநிலையம் போன்ற திட்டங்கள்.

சிறிசேனவிடம் இதற்கான ஆதாரங்கள் உள்ளதா?

அரசாங்கம் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என எதிர்பார்ப்பதாக மைத்திரிபாசிறிசேன தெரிவித்துள்ளார்.

மைத்திரிபாலசிறிசேனதான் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளின் பாரதூரதன்மையை உணரவில்லை போல தோன்றுகின்றது.

எந்த இராஜதந்திரியும் முன்னாள் ஜனாதிபதியின் வீட்டிற்கு சென்று நாங்கள்தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டோம் என தெரிவிக்கப்போவதில்லை – சித்திசுவாதீனமற்றவர் மாத்திரமே அவ்வாறு செயற்படுவார்.

இந்தியாவின் ரோ அமைப்பிடமிருந்து உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து வெளியான எச்சரிக்கையை முதலில் அறிந்தவர் சிறிசேன.

ஏன் அவர் தற்போது உயிர்த்த ஞாயிறு தினத்திற்கு முன்னர் இந்த குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றார்.

சிறிசேனவுடன் சமீபத்தில் இணைந்து கொண்டுள்ள வாகனஇறக்குமதியாளருக்கும் இந்த குற்றச்சாட்டுகளிற்கும் இடையில் தொடர்புள்ளதா என அரசாங்கத்தின் சில மட்டத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறிப்பிட்ட நபர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவுடன் இணைந்து செயற்பட்டவர் மோசமான நடவடிக்கைகள் காரணமாக அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இந்த நபர் தொடர்ந்தும் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார்.

மைத்திரிபாலசிறிசேனவின் வாக்குமூலத்தினை சிஐடியினர் பதிவு செய்துகொண்டிருந்தவேளை இந்த நபர் மேற்குலக இராஜதந்திரியுடன் உணவகமொன்றில் காணப்பட்டார்.

சிறிசேன தனது வாக்குமூலத்தை பூர்த்தி செய்ய முன்னரே இந்த இராஜதந்திரி இந்தியாதான் உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் பின்னணியில்உள்ளதாக தனது தொடர்பில் உள்ளவர்களிற்கு தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன சிஐடியினருக்கு வழங்கிய வாக்குமூலம் குறித்து அரசாங்கத்தின் உயர்வட்டாரங்கள் ஆராய்ந்துள்ளன.

இந்த விடயம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்டுள்ளது என்பதாலேயே அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் இது குறித்து அதிக கவனம் செலுத்தியுள்ளன.

சட்டமா அதிபரின் அறிவுரையின் கீழ் சிஐடியினர் நீதிமன்றத்தில் பி அறிக்கையை பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து நான்காம் திகதி நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றத்தில் ஆஜராகி அறி;க்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

சிறிசேன நீதிமன்றத்தில் ஆஜரானால் சிஐடியினர் முன்னிலையில் தெரிவித்த அனைத்து விடயங்களையும் அவர் பகிரங்கமாக தெரிவிக்கவேண்டிய நிலையேற்படும்.

இதனை விட மிக முக்கியமான விடயம் என்னவென்றால் இதற்கு இந்திய அரசாங்கம் பதிலளிக்கவேண்டிய நிலை உருவாகும்.

உள்நோக்கம் உள்ளதா இல்லையா தெரியவி;ல்லை. இந்தியா குறித்து குற்றம்சாட்டுவது இந்த விடயம் குறித்து இதுவரை தெரிவிக்கப்பட்ட அறியப்பட்ட அனைத்தையும் முற்றாக மாற்றியுள்ளது.

இலங்கை முஸலீம்களே இந்த தாக்குதலை மேற்கொண்டனர் என்பது நன்கு அறியப்பட்ட விடயம்

ஏன் தாக்குதலிற்கு இந்தியா ஒரு சமூகத்தை மாத்திரம் தெரிவுசெய்யவேண்டும்.

மேலும் இந்த விடயத்தில் ஐஎஸ் அமைப்பு மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதும் சிறிசேன தெரிவித்துள்ள விடயங்களை அர்த்தமற்றதாக்குகின்றது.

சிறிசேனவின் குற்றச்சாட்டுகள் தற்போதைய அரசாங்கத்தின் தலைமை மீது கடும் தாக்கத்தினை செலுத்தக்கூடும்

மைத்திரிபால சிறிசேனவை தொடர்புகொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

சண்டே டைம்ஸ்

கருத்துகள் இல்லை: