News18 Tamil - Anupriyam K : பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிய படி செல்வது சென்னையில் வாடிக்கையாகி வருகிறது. இதனை கண்டித்த நடிகை ரஞ்சனா தன்னை ஒரு போலீஸ் என கூறி அராஜகத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
01 சென்னையில் அரசு பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி ரகளை செய்து வந்த மாணவர்களை அடித்து அலறவிட்ட நடிகை ரஞ்சனாவை போலீசார் கைது செய்தனர்.
02 சென்னை போரூரிலிருந்து குன்றத்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் மாணவர்கள் தொங்கியவாறு சென்றதை கண்டதும் கொதித்தெழுந்த ரஞ்சனா, பேருந்தை நிறுத்தச் சொல்லி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சென்னை போரூரிலிருந்து குன்றத்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் மாணவர்கள் தொங்கியவாறு சென்றதை கண்டதும் கொதித்தெழுந்த ரஞ்சனா, பேருந்தை நிறுத்தச் சொல்லி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
03
பேருந்தின் படியில் தொங்கிக் கொண்டிருந்த மாணவர்களை தனது ஆக்ரோஷமான வார்த்தைகளால் திட்டியதோடு மட்டுமல்லாமல், போலீஸ் எனக் கூறி அடிதடியில் இறங்கினார். சிறிது நேரத்தில் யூ டர்ன் அடித்த அந்த நடிகை, நடத்துனரை நோக்கி ஏக வசனத்தில் பேசி அராஜகத்தில் ஈடுபட்டார்.

04
நடிகையின் நோக்கம் சரிதான் என்றாலும், செயல்படுத்திய முறைதான் தவறு என்கின்றனர் பேருந்தில் பயணித்த பயணிகள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.

05
தொடர்ந்து ஓட்டுநர் சரவணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் இன்று நடிகை ரஞ்சனாவை கைது செய்தனர். இவர் பாஜகவில் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

06
அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், அநாகரிகமாக பேசுதல், தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ரஞ்சனாவை கைது செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக