tamil.filmibeat.com - Karunanithi Vikraman : சென்னை: Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி மற்றும் விஜய்யை சகட்டுமேனிக்கு விளாசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக ரஜினிக்கும் விஜய்க்கும்தான் போட்டி என்ற நிலையை இருதரப்பு ரசிகர்களுமே உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
அதற்கு காரணம் ரஜினி கடந்த சில வருடங்களாகவே ஹிட்டுக்கு ஏங்கி கொண்டிருந்தார். குறிப்பாக அவரது நடிப்பில் வெளியான தர்பார், அண்ணாத்த ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியடைந்து சொல்லிக்கொள்ளும்படி வசூலும் செய்யவில்லை.
விஜய் வசூல்: அதேசமயம் விஜய் நடித்த பீஸ்ட், வாரிசு ஆகிய இரண்டு படங்களுமே தோல்வி என கூறப்பட்டாலும் வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக ரஜினியை விஜய் முந்திவிட்டார்.
இனி அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். அதற்கு ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்துவந்தனர்.
காக்கா கதை: சூழல் இப்படி இருக்க ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச்சில் பேசிய ரஜினிகாந்த் காக்கா, பருந்து கதையை சொன்னார். அதில் விஜய்யைத்தான் அவர் காக்கா என்று சொல்கிறார் என விஜய்யின் ரசிகர்கள் பேச ஆரம்பித்தனர். அதேபோல் ஹூக்கும் பாடலில் இடம்பெற்ற வரிகளும் விஜய்யைத்தான் தாக்குகின்றன என்று கருதப்பட்டது. ஒருவழியாக அந்தப் பஞ்சாயத்து முடிந்து ஜெயிலர் ரிலீஸாகி உலகம் முழுவதும் 700 கோடி ரூபாயை வசூலித்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
Vijay ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட Director Parthiban | Leo | Thalapathy VIjay | Lokesh Kanagaraj
லியோ ரிலீஸ்: ரஜினி சொன்ன கதைக்கு விஜய் பதிலடி கொடுப்பார் என்று அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க லியோ படத்துக்கு ஆடியோ வெளியீட்டு விழாவே நடக்கவில்லை. படம் கடந்த 19ஆம் தேதி ரிலீஸாகி 460 கோடி ரூபாய் வசூலித்தது. இதற்கிடையே படத்திலிருந்து வெளியான நா ரெடிதான் பாடலில் போஸ்டர் அடி அண்ணன் ரெடி என்ற வரியின் மூலம் விஜய் அரசியலுக்கு வருவதை உறுதி செய்திருக்கிறார் என்று பலரும் பேச ஆரம்பித்தனர்.
Leo: “கப்பு முக்கியம் பிகிலு..” லியோ சக்சஸ் மீட்... வடிவேலு மீம்ஸுடன் வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்! Leo: “கப்பு முக்கியம் பிகிலு..” லியோ சக்சஸ் மீட்... வடிவேலு மீம்ஸுடன் வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!
ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: இப்படி மாறி மாறி ரஜினியையும் விஜய்யையும் சுற்றித்தான் கடந்த சில மாதங்களாக டாபிக்குகள் ஓடிக்கொண்டிருந்தன. இந்த சூழலில் லியோ படமும் சரி, ஜெயிலர் படமும் சரி ஒருதரப்பினரிடத்தில் விமர்சன ரீதியாக அடி வாங்கியிருக்கிறது. இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில்,
"ப்ளாக் டிக்கட் விற்காமல், ஆடியோ லாஞ்சில் காக்கா கதை சொல்லாமல், பாடல்களில் 'பட்டத்தை புடுங்கறாங்க' என்று புலம்பாமல், 80% ஷேர் கேட்டு அலையாமல், நான் ரெடி போஸ்டர் அடி என அரசியல் காமடி செய்யாமல்.. நின்று நிதானமாக 50 நாட்கள் வரை ஓடி உண்மையாக வென்ற படங்கள்: டாக்டர், மாநாடு, விக்ரம், பொன்னியின் செல்வன் 1, லவ் டுடே etc" என குறிப்பிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன ரஜினியையும் விஜய்யையும் ப்ளூ சட்டை மாறன் இப்படி சகட்டுமேனிக்கு விளாசியிருக்கிறாரே என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக