மாலை மலர் : கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண் மற்றும் ஓ.பி.சி. அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவா ஆகியோருக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று பொதுவெளியில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. தொலைபேசியில் ஆபாசமாக திட்டி திருச்சி சூர்யா சிவா பேசிய ஆடியோ வைரலானது.
இந்த விவகாரம் தொடர்பாக, டெய்சி சரண், சூர்யா சிவா ஆகியோரிடம் திருப்பூரில் வைத்து பா.ஜ.க. ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதையடுத்து, சூர்யா சிவாவை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி பாஜக அறிவித்தது.
இதைதொடர்ந்து, பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா சிவாவிற்கு கட்சியில் மீண்டும் பதவி வழங்க உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று அறிவித்தார்.
மேலும், தான் வகித்து வந்த பதவியில் மீண்டும் தொடரவும் திருச்சி சூர்யா சிவாவுக்கு அண்ணாமலை அறிவுறுத்தினார்.
இந்நிலையில், இதுதொடர்பாக திருச்சி சூர்யா சிவா தன் முடிவை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து திருச்சி சிவா கூறுகையில், "திட்டமிட்டபடி எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் என்னை இணைத்து கொள்கிறேன். அதிமுகவில் இணைவது உறுதி" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக