ஞாயிறு, 27 நவம்பர், 2022

மாநகர பஸ், மின்சார ரெயில்களிலும் பயன்படுத்தும் வகையில் மெட்ரோ ரெயிலில் பொது பயண அட்டை

மாலைமலர் :  சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அடுத்த மாதம் இறுதியில் தேசிய பொது பயண அட்டையை வழங்க இருக்கிறது.
மெட்ரோ ரெயில், மாநகர பஸ், புறநகர் ரெயிலில் ஒரே பயண அட்டையில் பயணம் செய்ய முடியும். சென்னை: சென்னையில் பெருகி வரும் மக்கள் தொகைக்கும், நகர விரிவாக்கத்துக்கும் ஏற்ப போக்குவரத்து வசதிகள் திட்டமிடப்பட்டு வருகிறது.
தற்போது சென்னையில் மாநகர பஸ், மெட்ரோ ரெயில், புறநகர் மின்சார ரெயில் சேவையை பொது மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள்.
இதற்காக தனித்தனியாக பயணச் சீட்டு எடுத்து பயணம் செய்கிறார்கள்.


இந்த நிலையில் மெட்ரோ ரெயில், மாநகர பஸ், புற நகர் மின்சார ரெயிலில் செல்பவர்கள் பொதுவான ஒரே பயண அட்டை மூலம் பயணம் செய்வதற்கான புதிய திட்டம் அடுத்த மாதம் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதுதொடர்பான சாத்தியக்கூறுகள் தொடர்பாக கடந்த வாரம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழும கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது புதிய பயண திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததாக தெரிகிறது.

 சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அடுத்த மாதம் இறுதியில் தேசிய பொது பயண அட்டையை வழங்க இருக்கிறது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறும்போது,

சென்னை மெட்ரோ ரெயிலில் தேசிய பொது பயண அட்டை (என்.சி.எம்.சி) அடுத்த மாதம் இறுதியில் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் மெட்ரோ ரெயில், மாநகர பஸ், புறநகர் ரெயிலில் ஒரே பயண அட்டையில் பயணம் செய்ய முடியும். பார்க்கிங் கட்டணம், சுங்கச்சாவடி கட்டணமும்செலுத்தலாம்.

டிசம்பர் இறுதியில் வழங்கப்படும் இந்த பொதுவான பயண அட்டை முதலில் புதிய பயணிகளுக்கு வழங்கப்படும். தற்போது உள்ள பயண அட்டையை பயணிகள் தொடர்ந்து பயன்படுத்தலாம். தேசிய பொது பயண அட்டை தயாராக உள்ளது. வங்கிகளுடன் சில சிக்கல்கள் உள்ளன.

அதை சரி செய்யும் பணி நடந்து வருகிறது' என்றனர். மெட்ரோ ரெயில் Metro Train  Leave a comment Next Story உள்ளூர் செய்திகள் வேப்ப மரங்களை அதிகம் வளர்க்க வேண்டும் - 

கருத்துகள் இல்லை: