இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கு இந்த நிதியாண்டில் ஒன்றிய அரசு கொடுத்த ரூ.3,525 கோடி ஊதியமாகக் கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் செப்டம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு 1/11/2021 வரை ரூ.1,178 கோடி ஊதிய தொகை நிலுவையில் இருக்கிறது.
எனவே பண்டிகை காலங்களில் ஏழை எளிய மக்களின் சிரமத்தைக் குறைக்க, ஒரு வாரத்துக்கு முன்பே அமைச்சர் பெரியகருப்பன் அவர்களை முதல்வர் அனுப்பினார். அவர் ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங்கை சந்தித்துப் பேசினார். ஆனால் ஒரு வாரமாகியும், இதுவரை ஊதிய தொகை விடுவிக்கவில்லை.
எனவே 100 நாள் வேலைத் திட்ட ஊதிய தொகை வரவில்லை என்று முதல்வர் கடிதம் எழுதினார். இந்நிலையில் இன்று அல்லது நாளை காலைக்குள் நிலுவைத் தொகை வழங்க நிதியமைச்சரிடம் வலியுறுத்தினேன். பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக நிதியமைச்சர் உறுதி அளித்துள்ளார்” என்று கூறினார்.</> நாளை மறுதினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், ஊதியம் வழங்கப்படுமா என 100 நாள் வேலைத் திட்ட ஊழியர்கள் காத்திருக்கின்றனர். -பிரியா minnam
நூறு நாள் வேலை நிதி: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
மின்னம்பலம் : நூறுநாள் வேலைத் திட்டத்துக்கு உரிய நிதியை ஒதுக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத் திட்டமாக விளங்கும் நூறு நாள் திட்டம் என்கிற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு 2021-22 ஆம் ஆண்டில் ரூ. 73,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. நடப்பு நிதியாண்டில் இதுவரை 7 மாதங்கள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒரு மாதத்திற்கு முன்பே தீர்ந்து விட்டது. இன்றைய நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க நிதியில்லை. அதிலும் குறிப்பாக இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட தமிழ்நாடு அரசு ரூ.1,999 கோடியையும், ஆந்திர மாநில அரசு ரூ.2,323 கோடியையும் கூடுதலாக செலவழித்திருக்கின்றன.
இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அக்டோபர் 30ஆம் தேதி எச்சரித்திருந்த நிலையில் நவம்பர் 1 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு நிதியாண்டில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட வேலைவாய்ப்பில் அதிகபட்சம் நூறு நாள்கள் உடலுழைப்பை வழங்கும் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் ஊரக வேலை உறுதித் திட்டமும் ஒன்றாகும். நடப்பு நிதியாண்டில் ஒன்றிய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு ரூ.3,529.69 கோடி விடுவிக்கப்பட்டது. அதில், கடந்த செப்டம்பா் 15-ஆம் தேதி வரை தொழிலாளா்களின் கணக்கில் வரவு வைத்து முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதன்பிறகு இந்தத் திட்டத்துக்கு நிதி ஏதும் விடுவிக்காத காரணத்தால் நவம்பா் 1-ஆம் தேதியன்று உள்ளவாறு ரூ.1,178.12 கோடி அளவுக்கு ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையாக உள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கிராமப்புறங்களில் நிலையான வாழ்வாதார வாய்ப்பாகக் கருதப்படுகிறது. இப்போது ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் பல ஆயிரக்கணக்கான கிராமப்புறக் குடும்பங்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். இது கிராமப்புற மக்கள் வேலைவாய்ப்புக்காக நகா்ப்புறத்தை நோக்கி இடம்பெயர வழிவகுக்கும். பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, அவா்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை வழங்கிட ஏதுவாக உடனடியாக நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தனது கடிதத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக