கலைஞர் செய்திகள் : தீபஒளித் திருநாளன்று தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இறைச்சிக் கடைகளைத் திறக்க அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மகாவீர் நிர்வான் என்ற ஜெயின் மத பண்டிகையை ஒட்டி நவம்பர் 4ஆம் தேதி இறைச்சிக் கடைகள் மூடப்படும் என சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை வெளியிட்டது.
பெரும்பாலானோர் தீபஒளித் திருநாளறுதான் அதிகளவில் இறைச்சி எடுப்பார்கள் என்பதால் இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என இறைச்சிக்கடை உரிமையாளர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்தும் தமிழ்நாடு அரசு, இறைச்சிக்கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது.
ஜெயின் மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளிலுள்ள இறைச்சிக் கடைகளும், ஜெயின் மத வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியுள்ள இறைச்சிக் கடைகளும் மூடப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஞாயிறு, 31 அக்டோபர், 2021
தீபஒளித் திருநாளன்று தமிழ்நாடு முழுவதும் இறைச்சிக் கடைகள் திறக்கலாம் - தமிழ்நாடு அரசு அனுமதி!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக