ஞாயிறு, 24 அக்டோபர், 2021

சீன பில்லியனர்கள் ரத்த கண்ணீர்.. சம்பாதித்தது எல்லாம் கோவிந்தா..! கோவிந்தா

 Prasanna Venkatesh  -  GoodReturns Tamil :  உலகிலேயே மிகப்பெரிய வல்லரசு நாடாக உயர வேண்டும் என்ற நோக்கத்தில் சீனா அமெரிக்காவுடன் அனைத்துத் துறையிலும் போட்டிப்போட்டு வருவது மட்டும் அல்லாமல், அனைத்து வர்த்தகத் துறையிலும் சீன அரசும், சீன அரசு நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் அதிகாரம் செய்ய வேண்டும் என முக்கியமான திட்டத்தையும் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கையில் எடுத்துள்ளது. . 
 இதன் எதிரொலியாகச் சீன அரசு டிஜிட்டல் மற்றும் இண்டர்நெட் சேவையில் முதல் உற்பத்தி துறை வரையில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் சீன நாட்டின் தனியார் நிறுவனங்கள் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய நிர்வாகச் சீரமைப்பு நடவடிக்கையை எடுத்தது சீன அரசு.
 சீன அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது. அதாவது சீன அரசு தற்போது எடுத்துள்ள நடவடிக்கையின் மூலம் நிறுவனத்தின் வர்த்தகத்தில் எவ்விதமான சரிவும் இருக்காது, ஆனால் நிறுவனத்தின் நிர்வாகத்தில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்பட உள்ளது. 
 
அனைத்திற்கும் மேலாகச் சீனாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த பல டெக் நிறுவனங்களை ஓரம்கட்டி மூலையில் உட்கார வைத்துள்ளது சீன அரசு. இதனால் பல டெக் நிறுவனத் தலைவர்கள் அரசையும் எதிர்க்க முடியாமலும், ஆதிக்கம் செலுத்த முடியாமலும் வாயை மூடிக்கொண்டு பணியாற்றி வருகின்றனர். 
 
தப்பித்தவறி யாரேனும் சீன அரசு மீதோ, அல்லது சீன அதிகாரிகள், சீன சட்ட திட்டங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தால் வாழ்நாள் சிறைத் தண்டனை அல்லது அரசே மொத்த நிறுவனத்தைக் கைப்பற்றிவிடும் நிலை தான் தற்போது உள்ளது. 
 
இந்த இக்கட்டான சூழ்நிலையில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் வேகமாக வளர்ந்து வந்த சீன பில்லியனர்கள் 2021ஆம் ஆண்டு மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது மட்டும் அல்லாமல் அதிகளவிலான சொத்து மதிப்பை இழந்துள்ளனர். 
 
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் இண்டெக்ஸ் படி அதிகச் சொத்து மதிப்பை இழந்த 25 சீன பில்லியனர்கள் பட்டியலை தமிழ் குட்ரிட்டன்ஸ் தொகுத்து உள்ளது. 
கொலின் ஹுவாங் கொலின் ஹுவாங் 1 .
 
 கொலின் ஹுவாங் - Pinduoduo மொத்த சொத்து மதிப்பு 34.9 பில்லியன் டாலர், 2021ல் மட்டும் 27.7 பில்லியன் டாலர் இழப்பு 2 . 
 
ஹுய் கா யான் - Evergrande மொத்த சொத்து மதிப்பு 7.75 பில்லியன் டாலர், 2021ல் மட்டும் 15.5 பில்லியன் டாலர் இழப்பு 3 .
 
 ஜாங் ஷான்ஷன் - Nongfu Spring மொத்த சொத்து மதிப்பு 64.6 பில்லியன் டாலர், 2021ல் மட்டும் 13.6 பில்லியன் டாலர் இழப்பு 4 . 
 
லீ ஜுன் - Xiaomi மொத்த சொத்து மதிப்பு 19.9 பில்லியன் டாலர், 2021ல் மட்டும் 11.4 பில்லியன் டாலர் இழப்பு 5 . 
 
ஜாங் ஹுய்ஜுவான் - Hansoh Pharma மொத்த சொத்து மதிப்பு 10.9 பில்லியன் டாலர், 2021ல் மட்டும் 8.85 பில்லியன் டாலர் இழப்பு 8.72 பில்லியன் டாலர் இழப்பு 8.72 பில்லியன் டாலர் இழப்பு 6 . 
 
சன் பியாவோங் - Jiangsu Hengrui Medicine மொத்த சொத்து மதிப்பு 12.6 பில்லியன் டாலர், 2021ல் மட்டும் 8.72 பில்லியன் டாலர் இழப்பு 7 . 
 
சென் ஜுண்டா - Hansoh Pharma-வின் பெரும் பங்குதாரர் மொத்த சொத்து மதிப்பு 8.82 பில்லியன் டாலர், 2021ல் மட்டும் 8.1 பில்லியன் டாலர் இழப்பு 8 . 
 
வூ ஷாக்சுன் - Jing மதுபானம் மொத்த சொத்து மதிப்பு 8.58 பில்லியன் டாலர், 2021ல் மட்டும் 7.88 பில்லியன் டாலர் இழப்பு 9 . 
 
வாங் வெய் - SF Express மொத்த சொத்து மதிப்பு 17.8 பில்லியன் டாலர், 2021ல் மட்டும் 7.31 பில்லியன் டாலர் இழப்பு 10 . 
 
வாங் ஜியான்லின் - Dalian Wanda Group மொத்த சொத்து மதிப்பு 8.63 பில்லியன் டாலர், 2021ல் மட்டும் 6.43 பில்லியன் டாலர் இழப்பு Foshan Haitian Foshan Haitian 11 . 
 
பாங் காங் - Foshan Haitian மொத்த சொத்து மதிப்பு 25.9 பில்லியன் டாலர், 2021ல் மட்டும் 6.03 பில்லியன் டாலர் இழப்பு 12 . 
 
சென் ஜிப்பிங் - Smoore International மொத்த சொத்து மதிப்பு 10.5 பில்லியன் டாலர், 2021ல் மட்டும் 5.13 பில்லியன் டாலர் இழப்பு 13 . அவர் Xiangjian - Midea மொத்த சொத்து மதிப்பு 31.7 பில்லியன் டாலர், 2021ல் மட்டும் 5.09 பில்லியன் டாலர் இழப்பு 14 .
 Zhou Qunfei - Lens Technology மொத்த சொத்து மதிப்பு 10.3 பில்லியன் டாலர், 2021ல் மட்டும் 4.74 பில்லியன் டாலர் இழப்பு 15 .
 
 மா ஹுவாடெங் - Tencent மொத்த சொத்து மதிப்பு 51.8 பில்லியன் டாலர், 2021ல் மட்டும் 4.62 பில்லியன் டாலர் இழப்பு ஜாக் மா - 
 
Alibaba ஜாக் மா - Alibaba 16 . ஜாக் மா - Alibaba மொத்த சொத்து மதிப்பு 46.1 பில்லியன் டாலர், 2021ல் மட்டும் 4.52 பில்லியன் டாலர் இழப்பு 17 . 
 
சென் பேங் - Techedu மொத்த சொத்து மதிப்பு 16.6 பில்லியன் டாலர், 2021ல் மட்டும் 3.99 பில்லியன் டாலர் இழப்பு 18 . 
 
லியு யோங்ஹாவோ - New Hope மொத்த சொத்து மதிப்பு 10 பில்லியன் டாலர், 2021ல் மட்டும் 3.35 பில்லியன் டாலர் இழப்பு 19 . 
 
லி ஷுயிரோங் - Rongsheng Petrochemical மொத்த சொத்து மதிப்பு 8.75 பில்லியன் டாலர், 2021ல் மட்டும் 3 பில்லியன் டாலர் இழப்பு 20 . 
 
ஃபிராங்க் வாங் - DJI மொத்த சொத்து மதிப்பு 6.77 பில்லியன் டாலர், 2021ல் மட்டும் 2.89 பில்லியன் டாலர் இழப்பு
 ராபின் லி - Baidu ராபின் லி - Baidu 21 . 
ராபின் லி - Baidu மொத்த சொத்து மதிப்பு 12.9 பில்லியன் டாலர், 2021ல் மட்டும் 2.76 பில்லியன் டாலர் இழப்பு 22 . 
ஜாங் ஜிடாங் - Tencent மொத்த சொத்து மதிப்பு 22 பில்லியன் டாலர், 2021ல் மட்டும் 2.27 பில்லியன் டாலர் இழப்பு 23. 
 
லெங் யூ-பின் - Feihe மொத்த சொத்து மதிப்பு 8.47 பில்லியன் டாலர், 2021ல் மட்டும் 2.27 பில்லியன் டாலர் இழப்பு 24. 
வாங் லைச்சுன் - Luxshare Precision Industry மொத்த சொத்து மதிப்பு 7.94 பில்லியன் டாலர், 2021ல் மட்டும் 1.91 பில்லியன் டாலர் இழப்பு 25. 
செங் சூ - Foshan Haitian மொத்த சொத்து மதிப்பு 8.48 பில்லியன் டாலர், 2021ல் மட்டும் 1.90 பில்லியன் டாலர் இழப்பு

Read more at: https://tamil.goodreturns.in/news/chinese-billionaires-lost-wealth-massively-in-2021-after-china-govt-tech-crackdown-025370.html

கருத்துகள் இல்லை: