Rayar A - Oneindia Tamil : டெல்லி: கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக முன்னாள் சிஏஜி வினோத் ராய் புகார் கொடுத்தார்.
இதன் பிறகு இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்பட 14 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் சுமார் 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் 2017-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வழக்கிலிருந்து ஆ.ராசா, கனிமொழி உள்பட 14 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே 2ஜி அலைக்கற்றை விற்பனை தொடர்பான தமது தணிக்கை அறிக்கையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பெயர் இடம் பெறாமல் இருக்க காங்கிரஸ் எம்.பி. சஞ்சய் நிருபம் நெருக்கடி கொடுத்ததாக அப்போது சி.ஏ.ஜி.யாக வினோத் ராய் 2014-ம் ஆண்டு ஒரு பேட்டியின்போது குற்றம் சாட்டி இருந்தார்.
வினோத் ராய் பேச்சை எதிர்த்து சஞ்சய் நிருபம் டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த நிலையில் சஞ்சய் நிருபம் மீது அவதூறு பரப்பியதற்காக வினோத் ராய் மன்னிப்பு கேட்டுள்ளார். மாஜிஸ்திரேட் மனு ஸ்ரீயிடம் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில் வினோத் ராய் தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். அந்த வாக்குமூலத்தை சஞ்சய் நிருபம் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார் தவறாக குறிப்பிட்டேன் தவறாக குறிப்பிட்டேன்
இந்த வாக்குமூலத்தில் வினோத் ராய் கூறி இருப்பதாவது:- 11.09.2014 அன்று டைம்ஸ் நவ் சேனலின் அர்னாப் கோஸ்வாமிக்கு நான் அளித்த பேட்டியில் சஞ்சய் நிருபம் பற்றி சில விஷயங்களை நான் குறிப்பிட்டிருந்தேன். நேர்காணல் செய்பவர்கள் என்னிடம் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, சிஏஜியில் இருந்து அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் பெயரை நீக்குமாறு எனக்கு அழுத்தம் கொடுத்த எம்.பி.க்களில் ஒருவரான ஸ்ரீ சஞ்சய் நிருபமின் பெயரை நான் கவனக்குறைவாகவும் தவறாகவும் குறிப்பிட்டேன் என்பதை உணர்ந்தேன்.
மன்னிப்பு கேட்கிறேன் ... சஞ்சய் நிருபம், அவரது குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது அறிக்கைகள் ஏற்படுத்திய வலி மற்றும் வேதனையை நான் புரிந்துகொள்கிறேன், எனவே அத்தகைய அறிக்கைகளால் ஏற்பட்ட காயத்திற்கு எனது நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். இவ்வாறு வினோத் ராய் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக