ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

Dr. De Datta... , ஐ ஆர் 8 நெல்லும் பழம்பெரும் நடிகை எல் விஜயலட்சுமியும்

May be an image of 1 person
May be an image of 4 people, people standing and text

மதுரை மன்னன்  :     1960’ களில் ஆசியக்கண்டத்தில் உருவான  தானியப் பஞ்சத்தைப் போக்கும்வகையில்
சர்வதேச  நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின்  தலைமையகமான  பிலிப்பைன்சில் உள்ள International Rice Research Institute  ல் “IR8 நெல்” ஐ  1966 ல்  கண்டுபிடித்தவர்  டாக்டர் தத்தா என்பவர்
இவர்  சர்வதேசப்புகழ்பெற்ற இந்திய வேளாண் விஞ்ஞானியாகும்
சர்வதேச அளவில் பல விருதுகள் பெற்ற,  Dr. De Datta, (Surajit Kumar De Datta) பிறந்த தினம்  இன்று.
(01 ஆகஸ்ட் 1936)
சுமார் 27 வருடங்கள் வேளாண் துறையில் சர்வதேச அளவில்   பல  பதவிகள் வகித்த இவர்  1991 ல் இருந்து    அமெரிக்கா Virginia  ல் Virginia Tech ன் இயக்குனர் மற்றும் துணைத்தலைவராக  2013 வரை பதவி வகித்தார்.  இவர் பிரபல திரைப்பட நடிகை L.விஜயலக்ஷ்மியின் கணவராவார்,
இவர்களது திருமணம் 1969 ல் நடைபெற்றது,
முன்னாள் நடிகை எல் .விஜயலக்ஷ்மி தற்போது அமெரிக்கா Virginia  ல் உள்ள Virginia Polytechnic University ன் பட்ஜெட் திட்ட  அதிகாரியாக உள்ளார்.
ஒரு ஹெக்டேருக்கு சுமார் 5000 முதல் 6500 கிலோ வரை மகசூல் தரக்கூடிய “IR8 நெல்” ஐ கண்டுபிடித்து 1960’ களில் இந்தியா உள்பட  ஆசியக்கண்டத்தில் உருவான  தானியப்பஞ்சத்தைப் போக்கி மக்களை பசி, பட்டினி பஞ்சத்திலிருந்து காத்து  பசுமைப்புரட்சியை அக்காலகட்டத்தில்  Dr. De Datta உருவாக்கினார்.  
“IR8 நெல்”    Dee-gee-woo-gen என்ற நெல் ரகத்தையும், Peta  என்ற  நெல் ரகத்தையும் இணை சேர்த்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும்.  


வேளாண்துறையில்  சுமார் 80 ற்கும் மேற்பட்ட முனைவர்களை உருவாக்கிய இவர், சுமார் 400 ற்கும் மேற்பட்ட வேளாண்துறை சம்பந்தப்பட்ட கட்டுரைகளை சர்வதேச அளவில் பத்திரிக்கைகளில் எழுதியுள்ளார், மேலும் வேளாண் அறிவியல் சம்பந்தப்பட்ட பல்வேறு நூல்களும் எழுதியுள்ளார்

May be an image of grass

கருத்துகள் இல்லை: