BBC : பிளாஸ்டிக் தின்னும் பூஞ்சை -
பயோம் என்கிற உயிரியல் நிறுவனத்தில் உள்ள முதன்மை உயிரித் தொழில்நுட்பவியலாளர் சமந்தா ஜென்கின்ஸ்...
நிறுவனத்துக்காக சமந்தா ஜென்கின்ஸ் பூஞ்சைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தபோது ஒரு பூஞ்சை செய்த செயல் அவரது கவனத்தை ஈர்த்தது.
அந்த குடுவையை ஒரு ப்ளாஸ்டி பஞ்சால் மூடி வைத்திருந்தார்கள். அந்தப் பஞ்சைத் தின்றுவிட்டு பூஞ்சை வெளியில் வந்துவிட்டது.
உயிரியல் அடிப்படையில் காப்பிடுத் தகடுகள் உருவாக்குவதற்கான ஆராய்ச்சியில், முற்றிலும் புதிய ஒரு வழியை இந்தப் பூஞ்சை திறந்துவைத்திருக்கிறது.
இப்போது இந்தப் பூஞ்சையை இன்னும் செயல்திறன் மிக்கதாக மாற்றி, ப்ளாஸ்டிக் கழிவுகளை முற்றிலும் ஒழிக்க முடியுமா என்று பயோம் ஆராய்ந்து வருகிறது.
இந்த நிலை இப்போது சற்றே முன்னேறியிருக்கிறது. ஐரோப்பிய யூனியனில் 40% ப்ளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்படுகிறது. 2025க்குள் இது 50%ஆக அதிகரிக்கும் என்றும் இலக்கு நிர்ணயித்திருக்கிறார்கள்.
ஆனாலும், தண்ணீர் பாட்டில்கள் செய்ய உதவும் பாலி எத்திலீன் டெரிதாலேட் (PET - பெட்) போன்ற சில வகை ப்ளாஸ்டிக்குகளை வழக்கமான முறைகளை வைத்து மறுசுழற்சி செய்ய முடியாது. இதுபோன்ற சூழலில் உயிரியல் முறைகள் நல்ல தீர்வைக் கொடுக்குமா?
பெட் மற்றும் பாலியூரிதேன் வகை பிளாஸ்டிக்குகளின்மீதும் தன் பூஞ்சையை ஜென்கின்ஸ் பரிசோதித்துப் பார்த்தார்.
"நீங்கள் பிளாஸ்டிக்கை உணவாகக் கொடுத்தால் பூஞ்சைகள் அதை சாப்பிட்டுவிட்டு இனப்பெருக்கம் செய்து மேலும் பூஞ்சைகளை உருவாக்குகின்றன. அதன்பிறகு அதிலிருந்து நாம் உணவுக்காகவோ தீவனத்துக்காகவோ ஆன்டிபயாட்டிக் உருவாக்கவோ பொருட்களை எடுத்துக்கொள்ளலாம்" என்கிறார்.
வேறு சிலரும் இந்த முயற்சியில் ஓரளவு வெற்றி அடைந்திருக்கிறார்கள்.
"இந்த ஆய்வு இன்னும் ஆரம்பகட்டத்தில்தான் இருக்கிறது. இதன் செயல்திறனை அதிகரிக்கவும் செலவைக் குறைக்கவும் இன்னும் பல வழிகள் கண்டுபிடிக்கப்போகிறோம்" என்கிறார் பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறையைச் சேர்ந்த முனைவர் ஜோனா சாட்லர்.
"ஆனால் இதன் ஆரம்பகட்டமே சுவாரஸ்யமானதுதான். அடுத்தடுத்த மேம்பாடுகள் நடந்தபிறகு இது எதிர்காலத்தில் வணிக ரீதியாகவும் வெற்றிபெறும்" என்கிறார்.
BBC News
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக