புதன், 4 ஆகஸ்ட், 2021

குடிசை மாற்றுவாரியமும் கிளப் ஹவுஸ் விவாதங்களும்

சென்னையில் 2,652 குடியிருப்புகள் 3 இடங்களில் கட்டுகிறது கு.மா.வா., |  Dinamalar Tamil News

Kathir RS  :    ஒரு சில நாட்களுக்கு முன் நான் கூவம் ஆற்று குடிசைகள் பற்றி எழுதிய பதிவில் பல நண்பர்கள் என்னிடம் முரண் பட்டனர்.
இத்தனைக்கும் அப்பதிவை அரசு மீது நம்பிக்கை இழக்க வேண்டாம் அவர்கள் நிச்சயம் எல்லா பிரச்சனைகளையும் தீர்ப்பார்கள் என்ற கோணத்தில்தான் எழுதியிருந்தேன்.
சில நெருங்கிய நண்பர்கள் கூட நீங்கள் குடிசை மாற்று வாரியத்திற்கு எதிராக எழுதியது போலிருக்கிறது என்றனர்.விளக்கிச் சொன்னபின் புரிந்து கொண்டனர்.
அதற்கு அடுத்த நாள் க்ளப் ஹவுசில் ஒரு திமுக ஆதரவாளர்கள் நிரம்பிய ஒரு சோசியல்  அறையில் இதே பிரச்சனை பேசப்பட்டது.
சுமார் 4 மணி நேரம் நடந்த விவாதம் திமுகவிற்கு எதிராக திரும்பியது.சட்டென திமுகவோட பழைய கதையெல்லாம் எடுத்து விட்ருவேன் என ஒரு நபர் பேசினார்.


இன்னொரு பெண் திமுகவின் நில அபகரிப்பு ரியல் எஸ்டேட் கொலைகள் என தொடங்கினார் பிரச்சனை இந்த ரேஞ்சில் சென்றாலும்
அங்கிருந்த திமுக ஆதரவாளர்கள் விடுங்க இதெல்லாம் பேச வேணாம் நமக்குள்ளயே இப்படி சண்ட போட்டுக்க வேணாம்.சங்கிகளுக்கு கன்டென்ட் கொடுக்க வேண்டாம் என பேசிக் கொண்டிருந்தனர்.
நான் ட்ராவலிங்கில் இருந்ததாலும், அந்த எதிரணியினர் உச்ச கட்ட வெறுப்பில் உளறிக் கொண்டிருந்ததாலும், நம்மவர்கள் சிலர் பாதிக்கப்பட்டவர்கள் இப்படிதான் பேசுவாங்க அதை பெரிசு பண்ண வேண்டாம் என சொல்லிக்கொண்டிருந்ததாலும், எனக்கு அங்கிருந்த பலரை தெரியாது என்பதாலும், எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு கேட்டுக்கொண்டிருந்தேன்.

அயன் கார்த்திகேயனும் அந்த குழுவில் வந்து அந்த பிரச்சனையின் உண்மை நிலையை எடுத்துக் கூறிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சிலர் அவர் மீதே பாய நினைத்த வேலையில் அவர் நேக்காக பதில் சொல்லி விவாதத்திலிருந்து விலகிக் கொண்டார்.

அதன் பிறகு 1மணி நேரத்துக்கும் மேல் பலர்  திமுகவை வசை பாடிக் கொண்டிருந்த நிலையில் அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் நான் கேட்டேன். "குடிசை மாற்று வாரிய செயல்பாடுகளில் நீங்கள் சொல்லும் குற்றங்களை நான் ஏற்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். நம்ம சிஸ்டத்துல 100% பிரச்சனையே இல்லாமல் ஒரு திட்டத்தை செயல்படுத்துறது சாத்தியமில்லாத விசயம்.பல்லாயிரக் கணக்காண வீடுகளை கட்டிக் கொடுத்து கிட்டத்தட்ட 50ஆண்டு காலமாக செயல்படும் இந்த வாரியத்துக்கு நீங்க என்ன மதிப்பீடு தர்றீங்க? எத்தனை % வெற்றின்னு சொல்வீங்க..?குறைகள் இருக்கலாம் ..இன்னும் கவனம் தேவைப்படலாம் ..இதெல்லாம் வேற கதை..ஆனா உங்க பார்வையில் இந்த திட்டத்துக்கு உங்க மார்க் எவ்ளோ? என்றேன்.
வந்த பதில்கள் வருமாறு:

அதை எப்படி எங்க கிட்ட கேக்குறீங்க? நீங்களே கண்டு பிடிங்க..
பாதிக்கப்பட்டவுங்க கிட்ட இந்த கேள்விய கேக்குறது என்ன அறம்?
நாங்க எதுக்கு பதில் சொல்லனும்?
பிரச்சனையை சொன்னா அதுக்கு தீர்வு சொல்ல முடியாம எங்களையே கேள்வி கேக்குறீங்களா?
சரி சரி..நான் சொல்றேன்..அந்த திட்டம் 99.99% தோல்வி போதுமா?
இப்படி பல பதில்கள் ..
99.99% தோல்விங்குறத இந்த ஃபோரம் ஏற்கிறதா?என்ற என் பதில் கேள்விக்கு..
பாஸ் நாங்க பாதிக்கப்பட்டவுங்க அப்டித்தான் பேசுவோம்.
என்ற பதில் வந்தது.

பாதிக்கப்பட்டிருந்தால் அந்த பாதிப்பு பற்றி பேசி அதற்கான தீர்வை பற்றி பேசாமல் திமுகவை திட்டுவதற்காகவே ரூம் போட்டமாதிரி வீரபாண்டியார் 10 குடும்பத்தை வெட்டி கொலபண்ணி எரிச்சார்னல்லாம் பேசுனீங்களே ஏன்?
இடையிடையே என் குரல் தொடர்ந்து ம்யூட் செய்யப்பட்டது.
பலர் என்மீது பாயத் தொடங்கினார்கள்..
குடிசைமாற்று வாரியம் வீடு கட்டி கொடுத்தாலும் தொடர்ந்து ஸ்லம் வந்து கிட்டு தானே இருக்கு என்றார் இன்னொருவர்.இது எப்படி அரசின் குற்றமாகும் என்று நான் கேட்டதை ஒரு பெண் எதுக்கு நீங்க இங்க வர்றீங்க வந்து குடிசை போட்றீங்க என்று கேட்பதாக திரித்தார்.அதை மறுத்து விளக்கம் கொடுக்க முயன்ற போது மீண்டும் ம்யூட்.

எங்கள பாத்தா உங்களுக்கெல்லாம் புடிக்காது அருவருப்பா இருக்கும் அதுனாலதான் தூக்கி கண்ணகி நகரில் போட்றீங்க என ஒருவர் பேசியதையொட்டி நான் கேட்டேன்..
யாருக்கு அருவருப்பா இருக்குன்னு சொல்றீங்க..எனக்கா இல்ல இந்த ஃபோரம்ல உள்ளவுங்களுக்கா?  இல்ல அரசாங்கத்துக்கா?...
இப்படி மாற்றி மாற்றி பேசி சண்டை வலுத்த வேளையில் இப்படியெல்லாம் பேசினால் நான் தனியா ரூம் போட்டு திமுகவ கிழி கிழின்னு கிழிப்பேன் என்றார் அட்மின்களில் ஒருவர். இந்த மிரட்டல் எல்லாம் வேண்டாம் தோழர்..தாராளமா ஆரம்பிங்க..எதிர்கருத்துக்கும் தயாரா இருங்க என நான் சொன்ன வேளையில் அந்த ரூமை என்ட் செய்யச் சொல்லி ஒரு பெண் குரல் கேட்டது.
தொடர்ந்து யாரோ சட்டென அந்த ரூமை என்ட் செய்தார்கள்.
(அல்லது என்னை தூக்கி வெளியில் போட்டார்கள்.?)
**
CHல் நாம் யாருடன் பேசுகிறோம் என்பதை தெரிந்து பேசுவது நல்லது. நமது நண்பர்கள் என்ற பெயரில் எதிரிகள் எளிதாக ஊடுருவி
பாதிக்கப்பட்டவர்கள் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு திமுகவை தவறாக பேசுவதும் அதை புரிந்து கொள்ளாமல் நாம் அவர்களை வருடிக் கொடுப்பதும் மிக அபத்தமான செயல் என்பதை நாம் உணரவேண்டும்.
கதிர் ஆர்எஸ்
4/8/21

 கோபி ராஜ ராஜன்  :  அந்த குரூப்பு ஆரம்பத்துலே இருந்தே அப்புடி தான்.. திராவிடம் வளர்க்கிறோம்,வி பு அரசியலை கிழிக்கிறோம், சங்கிகளை எதிர்க்கிரோம்ன்னு சொல்லி கூவுவானுங்க..
பாயிண்ட்டா பேசுறவங்கள நோட் பண்ணி வச்சிக்கிட்டு, ரூம் வந்தவுடனே ஹென்ட் ரெயிஸ் ஆப் பண்ணிருவானுங்க.. அவனுங்க பேசுறது பூரா நமக்கு சப்போர்ட் பண்றா மாறியே பேசுவானுங்க.. ஆனா உள்ளடி நிறைய இருக்கும்..
முந்தா நேத்து அந்த ரூம்ல நானும் ரொம்ப நேரம் இருந்தேன்.. அந்த காரத்தினி ன்னு ஒரு லேடி பேசுனதுலாம் சிரிப்பு சிரிப்பா வந்துச்சு.. கடுப்புல வெளிய வந்துட்டேன்..
அந்த ரூம் பசங்க மேல எனக்கு ஆரம்பத்துலே இருந்தே டவுட் தான்... நம்ம ஆளுங்க கிட்ட நிறைய சொன்னேன்.. ஆனா யாரும் கேக்குற மாதிரி இல்ல.. உங்க கிட்ட கூட ஒரு தடவ சொன்னேன் ரூம்ல இருக்கும் போதே.. ஞாபகம் இருக்கா?

Poovannan Ganapathy  :  கிளப் ஹவுசில் ஒன்று அல்லது இரண்டு மாடரேட்டர் , ஒன்றிரெண்டு பேச்சாளர் தான் இருக்க வேண்டும்.
அவர்கள் பேசிய பிறகு கீழே சென்று விட்டால், அடுத்து வேறு ஒருவரை அழைக்கலாம். அவர் எந்த பக்கம் , எதை பற்றி பேசப்போகிறார் என்று கேட்டுக் கொண்டு பிறகு பேச அனுமதிக்க வேண்டும்.வன்மத்துடன் அவதூறுகளை , பொய்களை கொட்டுவதை அனுமதிக்க கூடாது

கருத்துகள் இல்லை: