"விளையாட்டு அரசியல்" பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும் இந்திய கிரிக்கெட் என்பது வணிகம் மட்டுமே என்று. அதனாலும், கிரிக்கெட்டை ரசிக்கும்படிக்கு ஏற்பட்ட Peer Pressureம் தான் எனக்கு கிரிக்கெட் பிடிக்காமல் போக மற்றொரு காரணம்.
ஆதலால் என் வாழ்நாளில் இதுவரை சச்சின் டெண்டுல்கரை ரசித்தது இல்லை. அவர் மீது எந்த விருப்பு வெறுப்போ அல்லது நன்மதிப்போ எப்போதும் இருந்தது இல்லை.
ஒரு முறை திருச்சியை சேர்ந்த ரூபன் பால் என்ற உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராக வரவேண்டிய ஒருவரை இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெறாமல் பார்த்துக் கொண்டது யார் என்று நண்பர் ஒருவர் மூலம் அறிகையிலும், சச்சின் சாதனைகளை அவர் பெயர் குறிப்பிட்டு பாராட்டு செய்தி பத்திரிக்கைகளில் வெளிவருவதும், வினோத் காம்ப்ளேவின் சாதனைகளை அவர் பெயர் குறிப்பிடாமல் இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை என்று பொத்தாம் பொதுவாக செய்தி வருவதன் பின்னணியில் உள்ள அரசியலை சகோதரர்
Senthamizh Saravanan
மூலம் தெரிந்து கொண்டதிலிருந்து கிரிக்கெட் மீதும் சச்சின் மீதும் வெறுப்பே உண்டானது. சச்சின் ஒரு பச்சை சந்தர்ப்பவாதி. அமைதியான Soft சங்கி என்று நான் முன்பே அறிந்திருந்தேன். இவ்ளோ நாள் சச்சினை ரசித்த உங்களையெல்லாம் நெனச்சா தான் எனக்கு பாவமா இருக்கு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக