திங்கள், 8 பிப்ரவரி, 2021

சசிகலா தமிழகம் திரும்புகிறார் 57 இடங்களில் உற்சாக வரவேற்பு கொடுக்க தொண்டர்கள்...

Vishnupriya R -   tamil.oneindia.com :  சென்னை: 4 ஆண்டுகள் கழித்து சென்னை வரும் சசிகலாவுக்கு இன்று வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து பெங்களூருவில் தங்கியிருக்கும் சசிகலா திங்கட்கிழமை காலை சென்னை திரும்புகிறார். தமிழகம் வரும் சசிகலாவிற்கு வழிநெடுக 57 இடங்களில் வரவேற்பு கொடுக்க அமமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். கர்நாடகா - தமிழக எல்லையான ஜூஜூவாடியில் மேளதாளம் முழங்க 5 ஆயிரம் பேர் சசிகலாவை வரவேற்கிறார்கள். அதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் வழியாக சென்னை அழைத்து வரப்படுகிறார். சென்னை எல்லையான செம்பரம்பாக்கம் தொடங்கி நசரத்பேட்டை, குமணன்சாவடி, போரூர், கிண்டி கத்திப்பாரா என தியாகராய நகர் வரை 32 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

சுவரொட்டிகள் சசிகலாவை வரவேற்று சென்னையின் பெரும்பாலான இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தியாகராய நகரில் உள்ள கிருஷ்ணபிரியாவின் இல்லத்தில் தங்க உள்ள சசிகலா அங்கேயே தொண்டர்களை சந்தித்து பேச உள்ளார்.
ஜெயலலிதா மேலும், சசிகலா ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துவதுடன், அதிமுக தலைமையகம் செல்லலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, சசிகலாவை வரவேற்று அழைத்து வருவதற்காக அமமுக பொதுசெயலாளர் தினகரன், அமமுக நிர்வாகி பழனியப்பன் உள்ளிட்டோர் பெங்களூருவில் முகாமிட்டுள்ளனர்.

சதி திட்டம் ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு அமைச்சர்கள் எதற்காக பயப்படுகிறார்கள் என்று கேள்வியெழுப்பிய தினகரன், ஆளுங்கட்சியினர் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த சதி திட்டம் தீட்டுவதாகவும் அச்சம் தெரிவித்தார். அதேநேரம் சசிகலா தமிழகம் திரும்புவதால் அதிமுகவினர் பதற்றமடையவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.

அமைச்சர் விமர்சனம் சசிகலா சிறையில் இருந்தபோது தினகரன் அவரது சொத்துக்களை கொள்ளையடித்துவிட்டதாகவும், தற்போது சசிகலா கணக்கு கேட்பார் என்ற பதற்றத்தில் தினகரன் இருப்பதாகவும் அமைச்சர் விமர்சித்தார். இந்நிலையில், சசிகலா வருகையை முன்னிட்டு சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

அதிமுக தலைமையகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சாலையின் இருமுனைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் புதிதாக 50 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு போலீஸ் பாதுகாப்பு வேதா இல்லம், பின்னி சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைகளிலும் கண்காணிப்பு பணி நடைபெறுகிறது. ஜெயலலிதா நினைவிடம் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ள போதிலும், அங்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்


கருத்துகள் இல்லை: