ஒரு கட்டத்தில் அதற்கு அவர்களே தலைவர்களானார்கள்.
அந்த ஆதிக்கம் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து சிறிது சிறிதாக பரவி ஒட்டு மொத்த நாட்டின் தலைமையை ஆட்டுவிக்கும் இடத்தை அவர்கள் பிடித்தார்கள்.
இன்றும் நம்மை அவர்கள் ஆள்கிறார்கள்.
அரசியலில்
சினிமாவில்
டிவி விளம்பரங்களில்
நமது வீட்டு விழாக்களில்
நமது சமையலறைகளில்
நமது ஆடைகளில்
நமது பழக்க வழக்கங்களில்
நமது பண்பாட்டில்
நமது கலைகளில்
அவர்களே நம்மை ஆள்கிறார்கள்.
இனம் மொழி சாதி என வேறுபடுத்திப்பார்க்க இயலவில்லை என்றாலும்..
வெளிநாட்டுக்காரர்களை வெளிநாட்டுக் காரர்கள் என்றாவது நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அந்த வெள்ளையர்களை நாம் வெளியேற்றத் தேவையில்லை..
ஆனால் அந்த வெள்ளையர்களை புரிந்து கொள்வதும் தெரிந்து கொள்வதும் அவசியமானதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக