nakkeeran : இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 6 சொத்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பில், 'உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் 14/02/20217
அன்று வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பின் படி, சென்னை வருவாய்
மாவட்டத்திற்குட்பட்ட இளவரசி, சுதாகரனின் பெயரிலுள்ள 6 சொத்துகள் அரசின்
சொத்து என உரிமை மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை டிடிகே சாலை
ஸ்ரீராம் நகரில் உள்ள லெக்ஸ் பிராப்பர்டி, டெவலப்மெண்ட் நிறுவனத்தின்
பெயரில் உள்ள சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. சென்னை வாலஸ்
தோட்டத்திலுள்ள 5 சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (08/02/2021) சசிகலா தமிழகம் திரும்ப
உள்ள நிலையில் அவரது உறவினர்களுக்கு சொந்தமான சொத்துகள்
அரசுடைமையாக்கப்பட்டுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக