செவ்வாய், 27 அக்டோபர், 2020

முஸ்லிமாக மதம் மாற மறுத்த இளம் பெண் பட்டப்பகலில் சுட்டு கொலை..ஹரியானா.. சிசிடிவி காட்சி

Hemavandhana - tamil.oneindia.com  : ஃபரீதாபாத்: காலேஜ்-க்கு போய்விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த 21 வயசு மாணவியை, மர்ம நபர் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஹரியானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் பாலப்கர் என்ற பகுதி உள்ளது.. இங்குள்ள ஒரு காலேஜில் படித்து வருபவர் நிகிதா தோமர்.. 21 வயதாகிறது. கடந்த திங்கட்கிழமை அன்று இவருக்கு தேர்வு நடந்தது.. அதனால் காலேஜ் சென்றுவிட்டு தேர்வையும் எழுதிமுடித்துவிட்டு, தோழியுடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

மர்மநபர் ! அப்போது, அங்கு திடீரென ஒரு கார் வந்து நின்றது.. அதில் இருந்து 2 மர்ம நபர்களில் ஒருவர், கையில் துப்பாக்கியுடன் தபதபவென காரில் இருந்து கீழே இறங்கி வந்தார்.. நிகிதாவை வழிமறித்து காரில் கடத்திச் செல்ல முயன்றார்.. ஆனால் அவரை பார்த்ததும் நிகிதா அங்கிருந்து தப்ப முயன்றார்.. எனினும் அந்த நபர் கையில் துப்பாக்கியை எடுத்து கொண்டு பின்னாடியே ஓடினார்.. இறுதியில் அந்த பெண்ணின் தலையில் சுட்டுவிட்டார். 


படுகொலை ! துப்பாக்கி குண்டு தலையில் துளைத்து, அந்த பெண் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். இதைத் தொடர்ந்து, அந்த மர்ம நபர் காரில் ஏறிக்கொண்டு பறந்துவிட்டார்.. உயிருக்கு போராடிய நிகிதாவை ஆஸ்பத்திரியில் அனுமதித்தும் பிரயோஜனம் இல்லை.. அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.
 
விசாரணை!  பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் சொல்லப்பட்டதையடுதுது, அவர்கள் விரைந்து வந்து சடலத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர்.. சம்பந்தப்பட்ட நபரையும் கைது செய்தனர்.. நிகிதா சுட்டுக்கொல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் சோஷியல் மீடியாவில் வெளியாகி பதைபதைப்பை தந்து வருகிறது.


நிகிதா !  பத்திரிகையாளர் ராஜ் சேகர் ஜா என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இந்த சிசிடிவி காட்சிகளை ஷேர் செய்துள்ளார்.. அந்த வீடியோவில், மர்மநபர் நிகிதாவின் கையை பிடித்து இழுப்பதும், நிகிதா அவரது பிடியில் இருந்து போராடுவதும் பதிவாகி உள்ளது.. அவரை சுட்டு கொன்றது தௌசிஃப் என்ற இளைஞர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


பேட்டி !  இந்தச் சம்பவம் குறித்து துணை கமிஷனர் ஜெய்வீர் சிங் ரதி சொல்லும்போது, "சோஹ்னா பகுதியைச் சேர்ந்தவர்தான் தௌசிஃப்.. அவர்தான் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.. சில மாதங்களுக்கு முன்பு நிகிதாவை துன்புறுத்துவதாக, நிகிதாவின் வீட்டில் தௌசிஃப் மீது புகார் தரப்பட்டது.. அந்தபுகாரின் பேரில், இரு தரப்பையும் அழைத்து போலீசார் சமாதானம் செய்து வைத்தனர்.. தற்போது 2 குற்றவாளிகளிடமும் விசாரணை நடந்து வருகிறது'' என்றார்.


மதமாற்றம் !  பலமுறை சொல்லியும் தௌசிஃப், இளம்பெண் நிகிதாவுக்கு பல வழிகளில் தொல்லை தந்து வந்துள்ளாராம்.. கட்டாய மதமாற்றம் செய்து, திருமணம் செய்யவும் முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.. இதற்கு நிகிதா மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.. எனவே, தௌசிஃப் போன் செய்தாலும் நிகிதா எடுக்காத காரணத்தினாலும், நம்பரை பிளாக் செய்துவிட்டதாலும்தான் நிகிதாவை கொலை செய்யும் ஆவேசம் தௌசிஃப்புக்கு ஏற்பட்டிருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.


சிசிடிவி காட்சிகள் எனினும், இந்த சம்பவத்தை அடுத்து ஃபரிதாபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.. மற்றொருபுறம் நிகிதாவின் காலேஜ்-க்கு வெளியே அனைத்து மாணவர்ளும் ஒன்று திரண்டு அவருக்காக நீதி கேட்டு போராடியும் வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் ஹரியானா மாநிலமே பரபரப்பாகி உள்ளது.

கருத்துகள் இல்லை: