சனி, 31 அக்டோபர், 2020

பிரான்சில் தீவிரவாத இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட உள்ளனர்!

francetamilar.com :“நாம் போரில் உள்ளோம். இஸ்லாமிய அடிப்படைவாதமும் பயங்கரவாதமும் முற்றாகஅழித்தொழிக்கப்படும். எங்களின் எதிரிகள் நாட்டிற்குள்ளும், வெளியிலும் உள்ளனர். 

நாட்டிலுள்ள அடிப்படைவாத, தீவிரமதவாத இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட உள்ளனர்‘” என Nice நகரின் தேவாலயத்திற்குள் நடாத்தப்பட்ட இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட்டார்மனின் (Gérald Darmanin) தெரிவித்துள்ளார்.

 சார்லி எப்தோவின் முன்னாள் அலுவலகம் மீதான தாக்குதல்,   Nice தாக்குதல், காவற்துறையினர் மீதான தாக்குதல் எனத் தொடர்சியான இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதல்கள் வலுத்து வருகின்றன. அடிப்படை தீவிர மதவாத இஸ்லாமியர்கள் 14பேர் இதுவரை நாட்டை விட்டு வெளியெற்றப்பட்டுள்ளனர்.

இன்னும் ஓரிரு நாட்களில், மேலும் 18 பேர் நாட்டை விட்டு வெளியேற்றப்படவுள்ளனர் எனவும், உள்துறை அமைச்சர் இன்று தெரிவித்துள்ளார்.

 Nice நகர தேவாலயத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து, அரசியல் தரப்பினரிடையே பலத்த கோபத்தினை இது ஏற்படுத்தியுள்ளது. தேசிய முன்னணி கட்சியின் தலைவர் Marine Le Pen இது குறித்து தெரிவிக்கும் போது, “பிரான்சில் இருந்து அனைத்து இஸ்லாமிய குழுக்களையும் விரட்டவேண்டும்” என குறிப்பிட்டார். குறிப்பாக UOIF அமைப்பினை (பிரான்சில் இஸ்லாமிய சங்கம். – Union of Islamic Organizations of France) அடியோடு இல்லாதொழிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். இஸ்லாமியர்களால் இயக்கப்படும் அனைத்து அமைப்புக்கள், அவர்களின் கலாச்சார நிகழ்வுகள், ஒன்றியங்கள், விளையாட்டு அமைப்புகள், நல்லின அமைப்புக்கள் என அனைத்தையும் பிரான்சில் இருந்து அடியோடு அழிக்கவேண்டும் என Marine Le Pen தெரிவித்தார். தவிர, இஸ்லாமிய அமைப்புகளிடம் உள்ள அனைத்து சொத்துக்கள், நிலங்களையும் கட்டாயமாக மீட்கவேண்டும் எனவும் Marine Le Pen குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: