ஞாயிறு, 1 டிசம்பர், 2019

லண்டன் பயங்கரவாதி உஸ்மான் கான் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவன் ...8 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றவன்


தினமலர் : லண்டன் : லண்டனில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதி , பாகிஸ்தானை மையமாக கொண்ட பயங்கரவாதிகளிடம் பயிற்சி மேற்கொண்டவன் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவன் லண்டன் பங்குச்சந்தையில் குண்டு வைக்க முயற்சி செய்த வழக்கில் 8 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றவன் என்றும் தெரிய வந்தது.
லண்டன் பிரிட்ஜ் அருகே பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவம் லண்டனில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லண்டன் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பாகிஸ்தானில் பிறந்து பின் பிரிட்டன் குடியுரிமை பெற்றவன் உஸ்மான்கான் 28. இவன் 2012 ல் லண்டன் பங்குச்சந்தை அலுவலகத்தில் குண்டு வைக்க சதி செய்ததாக கைது செய்யப்பட்டான். தொடர்ந்து இந்த விசாரணையில் அவனுக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் கான் இஸ்லாமிய கொள்கையில் நம்பிக்கை கொண்டவன் என்றும், ஜிகாத்தை பின்பற்றி வந்தவன் என்றும் அந்த தீர்ப்பில் கோடிட்டு காட்டப்பட்டடுள்ளது. கான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்படும் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளான். அங்கு முழு அளவில் பயிற்சி எடுத்துள்ளான் என்ற தகவலும் உறுதியாகி உள்ளது. இவன் அல்குவைதாவுடன் தொடர்பில் இருந்தானா என்ற ஆதாரம் ஏதும் இல்லை.
நேற்று நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட உஸ்மான்கான், உடலில் போலியான வெடிகுண்டுகளை கட்டி வந்துள்ளான். இவன் லண்டன் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டான்.

கருத்துகள் இல்லை: