வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

திமுக முன்னாள் பொருளாளர் சாதிக் பாட்சா பெயரை துரைமுருகன் குறிப்பிடாதது ஏன்?

Vallam Jaan Ymdawood‎ : கலைஞர்
போற்றிய அமைதி நிறை சாதிக் பாட்சா...
துரைமுருகனுக்கும் முன்னோடி சாதிக் பாட்சா... திமுக சார்ந்த தமிழக அரசியல் களத்தில் எளிமையான வாழ்க்கை வாழ்ந்த , எந்தவொரு சர்ச்சைகளிலும் பெயரை கெடுத்துக் கொள்ளாத தூய்மையான கழகத்தின் அடையாளம் சாதிக் பாட்சா... திமுக பொருளாளராக பதவி ஏற்று துரைமுருகன் அவர்கள் வழங்கிய ஏற்புரையில் பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து ஆற்காடு வீராசாமி வரையில் திமுகழகத்தின் பொருளாளராக பதவி வகித்தவர்கள் பெயரை பட்டியல் போட்டு நினைவு கூர்ந்தவர்
சுமார் 20 வருடங்களுக்கு மேலாக பொருளாளராக பதவி வகித்த சாதிக் பாட்சா பெயரை உச்சரிக்க மறந்தது சாதாரணமானது கிடையாது...
இளைய தலைமுறை திமுகவினருக்கு தெரியாத பெயர் தமிழக அரசியல்வாதியும் தமிழக அமைச்சரவையில் 1967 ல் அண்ணாவின் தலைமையிலும் 1969, 1971,1989ல் கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலும் தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
இவரின் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஆகும் . 1967, 1971, 1989 ல் உடுமலைப்பேட்டை தொகுதியிலும் 1977ல் ஆயிரம்விளக்கு தொகுதியிலும் வெற்றி பெற்ற இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1972 முதல் தமது இறுதி காலம் வரை பொருளாளராக பணியாற்றியுள்ளார்.
1994ல் காலமானார்.

கறை படாத கரத்துக்கு சொந்தக்காரர்..
அரசியல் மற்றும் பொதுவாழ்வில் நேர்மையாக இருந்த தமிழக அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர்.. பிற்காலத்தில் திமுக வால் நினைவு கூறப்படாதவர்

M Shajahan Bsc : · > துரைமுருகனுக்கு முன்னோடியானவர் திமுக பொருளாளர்..., மறைந்த முன்னாள் அமைச்சர் சாதிக் பாட்சா...!திமுக சார்ந்த தமிழக அரசியல் களத்தில்..., மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து எந்தவொரு தவறான சர்ச்சைகளிலும் தன் பெயரை சிறிதும் கெடுத்துக் கொள்ளாதவர்  மிகவும் தூய்மையான கழக அடையாளம்...!
திமுக பொருளாளராக பதவி ஏற்று துரைமுருகன் அவர்கள் வழங்கிய ஏற்புரையில்...,
பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து ஆற்காடு வீராசாமி வரையில்...,
திமுகழகத்தின் பொருளாளராக பதவி வகித்தவர்கள் பெயரை நினைவு கூர்ந்தவர்...,
ஏனோ...?
சுமார் 22 வருடங்கள் பொருளாளராக பதவி வகித்த சாதிக் பாட்சா பெயரை உச்சரிக்க மறந்தது விட்டார்...!
இளைய தலைமுறை திமுகவினருக்கு தெரியாத பெயர்...,
"அமைதியின் சின்னம்"
அண்ணன் சாதிக்...!
1967 ல் அண்ணாவின் தலைமையிலும்...,
1969, 1971,1989ல் தலைவர் கலைஞர்
தலைமையிலும்...,
வருவாய்த்துறை அமைச்சராக பதவி வகித்தார்...!
இவரின் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை...!
1967, 1971, 1989 ல் உடுமலைப்பேட்டை தொகுதியிலும்...,
1977ல் ஆயிரம்விளக்கு தொகுதியிலும் வெற்றி பெற்றவர்...!
கழகத்தில் 1972 முதல் தமது இறுதி காலம் வரை பொருளாளராக பணியாற்றியுள்ளார்...!
வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் இரண்டாவது மாடியில்
தன் இறுதி நாளைக் கழித்தவர்...!
1994ல் காலமானார்...!!
கறை படாத கரத்துக்கு சொந்தக்காரர்...!
அரசியல் மற்றும் பொதுவாழ்வில் நேர்மையானவர்...!
அமைதியின் வடிவம்
என்று கலைஞரால்
அன்போடு அழைக்கப்
பட்டவர்...!
தமிழகத்தின் தலை சிறந்த வழக்கறிஞர்ளில் ஒருவர்...!
சட்ட அமைச்சராகவும்
சிறப்புடன் பணியாற்றியவர்...!
கழகத்தின் கணக்கு வழக்குகளில் மிகவும் கண்டிப்பானவர்...!
தேவையற்ற...,
ஆடம்பர செலவுகுளுக்கு ஒப்புதல் தராதவர்...!
வாகன போக்குவரத்து
எரிபொருள் கணக்கை கூட கறாராக கேட்டு வாங்குபவர்...!

கருத்துகள் இல்லை: