ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

திமுக தலைவராக ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு .. துரைமுருகன் பொருளாளராக...

தி.மு.க அமைப்புச் செயலாலர் ஆர்எஸ் பாரதியிடம் வேட்புமனுத் தாக்கல் செய்த மு.க.ஸ்டாலின்   -  படம்: எல்.சீனிவாசன்

கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய முக ஸ்டாலின், துரைமுருகன்
பொதுச்செயலாளர் அன்பழகனிடம் ஆசி பெற்ற முக ஸ்டாலின்
அதன்படி, வரும் 28-ம் தேதி திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நடத்தவும், அதில் திமுக தலைவர், பொருளாளர் பதவிக்கான தேர்தல் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, திமுக தலைவர் பதவி, பொருளாளர் பதவிக்கு போட்டியிடுவோர் தங்கள் வேட்புமனுக்களை இன்று திமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் தனது வேட்புமனு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் இன்று தாக்கல் செய்தார். மு.க.ஸ்டாலின் மனுவை 65 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிந்தனர்.
 முன்னதாக, வேட்புமனுவைத் தாக்கல் செய்யும் முன், செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மனுவுடன் பொதுச்செயலாளர் அன்பழகனை அவரின் இல்லத்தில் சந்தித்து ஆசிபெற்றார். அதன்பின் கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்று அங்கு அஞ்சலி செலுத்தினார். உடன் வந்திருந்த துரைமுருகனும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
அங்கிருந்து புறப்பட்ட ஸ்டாலின், கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று கருணாநிதி புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, தாயார் தயாளுஅம்மாளிடம் ஆசி பெற்று, அறிவாலயம் வந்து சேர்ந்தார்.
அறிவாலயம் வந்த திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். அறிவாலயத்தில் உள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை,  மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
வேட்புமனுக் கட்டணம் ரூ.25 ஆயிரத்தைச் செலுத்தி அதற்கான ரசீதையும் பெற்றுக்கொண்டார். முக.ஸ்டாலின் வேட்புமனுவை 65 மாவட்டச் செயலாளர் முன்மொழிந்தனர். பொருளாதார பதவிக்கு துரைமுருகன் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
தலைவர் பதவிக்கும், பொருளாளர் பதவிக்கும் வேறு யாரும் போட்டியிடாததால், போட்டியின்றி இருவரும் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை நண்பகல் 1.30மணிவரை வேட்புமனுக்களைத் திரும்பப்பெறலாம், மாலை 5மணிக்குப் பெயர்கள் உறுதி செய்யப்படும்.

கருத்துகள் இல்லை: