tamil.oneindia.com/authors/kalai-mathi.திருவனந்தபுரம்: உலகம் முழுவதும் உள்ள மலையாள மக்கள் தங்களின் ஒரு மாத சம்பளத்தை கேரள அரசுக்கு நிவாரணமாக வழங்க வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார். கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தொடர் கனமழை காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 350 பேர் வரை பலியாகியுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கிய சுமார் 10 லட்சம் பேர்
மீட்கப்பட்டு அரசு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கான வீடுகள் நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்துள்ளன.தற்போது மழை நின்றுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கேரள வெள்ள நிவாரணத்திற்கு இந்தியா முழுவதுமுள்ள மாநிலங்களில் இருந்து நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன. கேரளாவில் மழை குறைந்து, வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. இதனால் நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்பி வருகின்றனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக