வியாழன், 30 ஆகஸ்ட், 2018

மனித உரிமையாளர்களை வீட்டுக்காவலில் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு


nakkeeran : 5 மாநிலங்களில் வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், மக்கள் உரிமை
mkபோராளிகள் கைது  செய்யப்பட்டுள்ளனர்.  மேலும், அவர்களது வீடுகளில் நடந்த சோதனையை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.  மேலும் இது குறித்து அவ்வியக்கம் தெரிவித்துள்ளதாவது: ’’இந்து மதவெறி பார்ப்பன பாசிச மோடி அரசு போராளிகள் மீதான  நரவேட்டையை தீவிரமாக்கி இருக்கிறது. மோடியைக் கொல்ல சதி என ஒரு அப்பட்டமான பொய்யை சொல்லி தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் தொழிலாளர்கள் நலனுக்காக தொடர்ந்து போராடி வரும் இந்தியாவின் புகழ்பெற்ற சமூக செயல்பாட்டாளர்கள்  5 பேரை கைது செய்திருக்கிறது மராட்டிய பாஜக அரசு. கவிஞர் வரவர ராவ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், பேராசிரியர் வெர்ணன் கன்சால்வேஸ், வழக்கறிஞர் அருண் பெரிரா, பத்திரிக்கையாளர் கௌதம் ஆகியோர் ஆள்தூக்கி உபா சட்டத்தின் கீழ் செவ்வாய் அன்று கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி இதே காரணத்திற்காக பேராசிரியர்கள் சத்யநாராயணா ஆனந்த் தெல்தும்டே  பாதிரியார் ஸ்டாண்சாமி பத்திரிக்கையாளர் குர்மலாக் (வரவரராவ்  மருமகன்) கிரந்தி தெகுலா ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர்.


 பிரதமர் மோடியைக் கொல்ல சதி செய்து இருப்பதாக கூறி கடந்த பிப்ரவரி மாதம் வழக்கறிஞர் ரோனா வில்சன் உள்ளிட்ட 5 பிரபல மனித உரிமைப் போராளிகள் கொடிய உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மோடியை கொல்ல சதி செய்யும் கடிதம் ஒன்றை கைப்பற்றியதாக ஒரு கட்டுக்கதையை அவிழ்த்து விட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். அதே காரணத்தை கூறி இப்போது கைது சோதனை என அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது மோடி கும்பல்.

கடந்த ஜனவரியில் மராட்டிய மாநிலம் பீமா கோரேகானில் பார்ப்பனர்களை தாழ்த்தப்பட்ட படை வீரர்கள் வெற்றி கொண்ட 200வது ஆண்டு கொண்டாட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்புகளைச் சார்ந்த ரவுடிகள் கலவரம் செய்தனர். இதனை தொடர்ந்து மனித  உரிமைகளுக்காகவும் மோடி அரசின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்தும் பார்ப்பன பாசிசத்தை அம்பலப்படுத்தியும் எழுதி, பேசி வருகின்ற நாட்டின் புகழ்பெற்ற கல்வியாளர்கள் பேராசிரியர்கள்  இடதுசாரி சிந்தனையாளர்கள் அறிவுத்துறையினர்  கழுத்தை நெரித்து மக்கள் போராட்டங்களை ஒடுக்க நினைக்கிறது மோடி அரசு.

 அவசரநிலை அடக்குமுறையை விட கொடிய ஓடுக்குமுறைக்கு தயாராவதின் தொடக்கம் தான் இந்த கைது சோதனை. ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலின் பாசிச ஒடுக்குமுறையை முறியடிக்காமல் ஒடுக்கப்பட்ட மக்களின் சிறுபான்மையினர் விவசாயிகள் தொழிலாளர்கள் ஆகியோர் நலனைக் காப்பாற்ற முடியாது. எனவே அனைத்து ஜனநாயக சக்திகளும் புரட்சிகர இயக்கங்களும் இந்த அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்போம் ஓரணியில் திரண்டு முறியடிப்போம்.’

கருத்துகள் இல்லை: