ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

மன்னார்குடி - மோடி தரப்பு பேரம் படிந்தது .. தமிழகம் விற்கப்படும் .. மன்னார்குடி காப்பாற்றப்படும்?

லோ தலைவரே, ஜெயிலுக்குப் போறதுக்கு முன்னாடி, ஜெ. சமாதிக்குப் போய் சத்தியமடிச்சு சபதம் செஞ்ச சசிகலாவைப் பத்தி, சோஷியல் மீடியாக்கள்ல தாறுமாறான மீம்ஸுகள் வைரல் ஆனதைக் கவனிச்சீங்களா?''’""எல்லாரும் ஏகத்துக்கும் கலாய்க்கறதைக் கவனிச்சேம்ப்பா. சத்தியமடிக்கும்போது முகத்திலே கடுமையான வெறியோடு, சசிகலா ஏதோ முணுமுணுத்தாரே, அதை கவனிச்சியா?''’"15-ந் தேதி காலை 11.40-க்கு கார்டன்ல இருந்து சசிகலாவின் சிறை யாத்திரை ஆரம்பிச்சிது. அப்ப கட்சி நிர்வாகிகளும் சொந்தபந்தங்களும் அங்க நிறைஞ்சிருந்தாங்க. ஆனா லும், கார்டன் வாசல்ல தொண்டர்கள் கூட்டம் பெருசா இல்லை. ஒருவித இறுக்கத்தோட, நேரா ஜெ.’சமாதிக்குப் போன சசிகலா, அங்க அஞ்சலியை செலுத்திட்டு, மூணு தடவை அவர் சமாதி மேல் ஆங்காரத்தோட கையால் அடிச்சி, சூளுரை டைப்ல சத்தியம் செஞ்சார்.'

""என்ன சபதம் எடுத்தாராம்?''
""பக்கத்திலே நின்ன கட்சி நிர்வாகிகள்கிட்டே பேசுனேங்க தலைவரே..
முதல் சபதம்,  ஜெயிலுக்குப் போனாலும் நான் விரும்பிய ஆட்சியை இங்கே அமைப்பேங்கிறது. ரெண்டாவது சபதம், என் முதல்வர் கனவைத் தகர்த்த ஓ.பி.எஸ்.சை, அரசியல்ல தலையெடுக்க விடாம ஆக்குவேன்ங்கிறது.
மூணாவது சபதம்,  நான் ஜெயிலுக்குப் போறேன்னு சந்தோசப்படுற எதிரி கட்சிகளோட முகத்தில் கரியைப் பூசுற மாதிரி சீக்கிரமே வெளியே வந்துகாட்டுறேன்னு சத்தியம் அடிச்சாராம்.

பிறகு அங்கிருந்து ராமாவரம் எம்.ஜி.ஆர். வீட்டில் தியானம் பண்ணிட்டு, பெங்களூருவை நோக்கிப் பயணப்பட்டார் சசி. வழியில் காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி எல்லைகள்ல, அந்தந்த மா.செ.க்களை வரவழைச்சி, "கட்சியைப் பார்த்துக்கங்க. டி.டி.வி.தினகரன் சொல்றபடி நடந்துக்கங்க'ன்னு  உத்தரவு போட் டுட்டு,  பரப்பன அக்ரஹாரா சிறைக்கு 5.30-மணிக் குப் போய்ச் சேர்ந்தார் சசிகலா. அதுக்கப்புறம், சிறைக்குள் என்னவெல்லாம் நடந்துச்சுங்கிறதை நம்ம நக்கீரன்ல தெரிஞ்சுக்கலாம்

"ஓ.பி.எஸ்.ஸை மேலிட உத்தரவுப்படி கவர்னர் நீடிக்க வச்சிடுவாருன்னு எதிர்பார்ப்பு அதிகமான நேரத்துல, காலங்கடத்திக்கிட்டே இருந்த கவர்னர் வித்யாசாகர்ராவ் எப்படி எடப்பாடியைக் கூப்பிட்டாரு?

'"ஓ.பி.எஸ்ஸுக்காக சட்டத்தில் இருக்கும் சந்து பொந்துகளை எல்லாம்  சாதகமாக்கிக்கிட்டு, காலத் தைக் கடத்திக்கிட்டே இருந்தார் பொறுப்பு கவர்னர். இதற்கிடையே, தி.மு.க.வின் ஆதரவைக் கேட்டுப் பார்க்கும்படி டெல்லி பா.ஜ.க., ஓ.பி.எஸ். தரப்பைத் தூண்டுச்சு. பி.ஜே.பி.க்கு வேண்டிய டெல்லி ஆட்களும், தி.மு.க. தலைமையின் டோரைத் தட்டிப் பார்த்தாங்க. திறக்கலையாம்.

ஏற்கனவே அ.தி.மு.க.வில் இருந்து இப்ப தி.மு.க.விலே இருக்கிற எ.வ.வேலு, சேகர் பாபு போன்றவர்களை ஓ.பி.எஸ். தரப்பு அணுகுச்சு. இவங்களும் சித்தரஞ்சன் சாலை யில் பேசிப் பார்க்கிறோம்ன்னு சொன்னாங்களாம். ஆனா ஸ்டாலினும், கோபாலபுரமும், மாறன் சகோதரர்களும், "நாம ஏன் ஓ.பி.எஸ்.சை  ஆதரிச்சி அவரோட இமேஜை டெவலப் செய்யணும்'ன்னு மறுத்துட்டாங்களாம்.
அதோட, நம்மை வார்த் தைக்கு வார்த்தை  தீயசக்தின்னு விமர்சனம் செஞ்ச வங்கதான், ஊழல் செஞ்சது மூலமா உண்மையான தீய சக்தின்னு உச்சநீதிமன்றத்தாலே சட்டப்பூர்வமா தீர்ப்பே கொடுக்கப்பட்டிருக்குது. அப்படிப்பட்ட அ.தி.மு.க., உள்கட்சி மோதலால் உடையும்போது, "நாம எதுக்காக அதுக்கு முட்டுக் கொடுக்கணும்? நமக்குத் தேவை மறுதேர்தல்தான். அ.தி.மு.க. அட்டாக் முடிவுக்கு வந்துவிட்டது. 

  தி.மு.க செட் ஆகலைன்னதும் ஓ.பி.எஸ் தரப்பும்,  பா.ஜ.க. டீமும் கூவத்தூர் பக்கம் பார்வையைத் திருப்பிச்சி.""அங்கே என்ன மூவ் நடந்ததாம்?

""கூவத்தூர்ல இருந்து மாறு வேசத்துல எம்.எல்.ஏ. வந்தாருன்னதும், இன்னும் வேற யாராவது அணிமாற வாய்ப்பு இருக்கான்னு பா.ஜ.க.தரப்பு பல்ஸ் பார்த்து. அங்க 119 பேருக்கு மேல் சசிகலாவுக்கு சப்போர்ட்டா இருக்காங்கன்னும், கண்கொத்தி பாம்பா வாட்ச் பண்ண ஆட்கள் இருக்காங்கன்னு தெரிஞ்சதும், ஓ.பி.எஸ் அணியைப் பலப்படுத்த வாய்ப்பில்லைன்னு டெல்லிக்குத் தெரிஞ்சிடிச்சி.

"அதுக்கப்புறம்தான் எடப்பாடிக்கு அதிர்ஷ்டம் அடிச்சிதா?''

""ஆமாங்க தலைவரே,  கார்டன் டீமோடு பா.ஜ.க. தரப்பு பேச்சுவார்த்தையை ஆரம்பிச்சிது. இதுக்காக திவாகரனைத் தொடர்புகொண்டாங் களாம். பா.ஜ.க.வுடன் கூட்டணின்னு பகிரங்கமா அறிவிக்கணும், அ.தி.மு.க சைடில் ஒரு எம்.எல்.ஏ.வை யாவது ரிசைன் பண்ண வச்சு, அந்தத் தொகுதியை பா.ஜ.க.வுக்கு விட்டுக் கொடுப்பதோட, பா.ஜ.க.வுக் குத் துணை முதல்வர் பதவியையும் தரணும்ன்னு டிமாண்ட் வைக்கப்பட்டது.

இதை கார்டன் ஏத்துக் கலை. அதன்பின், மத்திய அரசின் திட்டங்களை முழுமையா ஆதரிக்க ணும், வரப்போகும் குடி யரசுத் தலைவர் தேர்த லின் போது, பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆத ரவைத் தரணும், எந்தக் காரணம் முன்னிட்டும் பா.ஜ.க.வை விமர்சிக்கக் கூடாது. இதுக்கு சம் மதம்ன்னா, ஆட்சி அமைக்கும் வாய்ப்பு சசிதரப்புக்கு உண்டுன்னு சொல்லப்பட்டுச்சு. கார் டன் தரப்பில் ஒப்புக் கொண்டு, அவங்களோட டிமாண்டை சொல்லியிருக்காங்க.

""என்ன டிமாண்ட்?'
""நடராஜன், தினகரன் மீதான அமலாக் கத் துறையின் வழக்கில் காட்டுற திடீர் வேகத்தை  நிதானப்படுத்தணும்ங்கிறதுதான் முக்கிய டிமாண்ட். மற்ற கேஸ்களையும் இப்போதைக்கு தூசு தட்ட வேண்டாம்னு சொன்னாங்களாம்.

இதுக்கு பா.ஜ.க. தரப்பில் ஓ.கே. சொல்லப்பட்டிருக்கு. இப்படியொரு ஆதரவுக்காகக் காத்திருந்த கார்டனும் முழு ஒத்துழைப்பு தர சம்மதம் சொல்லிடிச்சாம். இதற்கப்புறம்தான் 16-ந் தேதி, எடப்பாடி ஆட்சி அமைக்க பொறுப்பு கவர்னரால் அழைக்கப்பட்டாரு. கவர்னரின் ஒரு வாரகால மௌனத்தின் பின்னாடி இவ்வள வும் நடந்திருக்கு...''’’  நக்கீரன்

கருத்துகள் இல்லை: