ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

ஊழல் பைல்களை வைத்து பன்னீரையும் எடப்பாடியையும் முழுங்கிவிட்டது பாஜக !


அப்ப ஓ.பி.எஸ்.சை டெல்லி பா.ஜ.க. கழற்றிவிட்டுடுச்சா?'
 ‘""முழுசா அவரைக் கழற்றிவிடலை. அவரை இப்பவும் தன்னோட ஆளாத்தான் அது வச்சிருக்கு. அவரும் தன்மேல் எடப்பாடி அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க, பா.ஜ.க.வின் தயவை எதிர்பார்க்கிறார். முதல்வர் பதவி பறிபோன கொஞ்ச நேரத்திலேயே அவர் வீட்டு மேலே கல்வீச்சு, மண்டை உடைப்புன்னு ரத்தக் களரியாச்சி. அதோடு, அரசு இல்லமான க்ரீன் வேஸ் வீட்டை உடனடியா காலி செய்யச் சொல்லி நெருக்கடி வந்தது. கொஞ்ச நாள் ஆட்சியில் இருந்தாலும் அவர் குடும்பத்து ஆட்களின் தலையீட்டில் சில பல முக்கிய ஃபைல்கள் மூவ் ஆகியிருக்குதாம். அதையெல் லாம் தோண்டிடக்கூடாதுன்னும் பா.ஜ.க அரசின் தயவை ஓ.பி.எஸ். எதிர்பார்க்கிறாரு.
 "அவர் பதவி பறிபோகுதுன்னு தெரிஞ்சதுமே அவருக்காக மைத்ரேயன் உடனே டெல்லிக்குப் போய் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் கதவைத் தட்டி யிருக்காரே?
""மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி யையும் மைத்ரேயன் சந்திச்சிருக்காருங்க தலைவரே.. .'
"அந்த விஷயத்தை நான் சொல்றேன்.. அருண் ஜெட்லியை மைத்ரேயன் சந்திச்சப்ப "கூவத்தூரிலிருந்து எங்களால எம்.எல்.ஏ.க் களைக் கொண்டு வர முடியலையே தவிர, உள்ளே இருக்கிறவங்களில் 35 பேர் எங்களுக்கு சப்போர்ட்டா இருக்காங்க. அதனால சட்டமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினாத்தான் உண்மை பலம் தெரியவரும்'னு சொல்லியிருக்காரு. ஓ.பி.எஸ் தரப்பு எம்.எல்.ஏக்களை அனுப்பி சபாநாயகர்கிட்டே இதை வலியுறுத்துங்க. கவர்னர் நம்ம பக்கம் இருக்காருன்னு அருண்ஜெட்லி நம்பிக்கை கொடுத்தாராம். கடைசி நேரம் வரைக்கும்ஓ.பி.எஸ்-பா.ஜ.க கூட்டணி டென்ஷனை மெயின்டெய்ன் பண்ணிக்கிட்டே இருந்தது...'' நக்கீரன்

கருத்துகள் இல்லை: