ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

ராம் ::வாக்கெடுப்பு ஜனநாயக முறையில் நடக்கவில்லை .. திமுக அரசியல் முன்னிலையை பிடித்து இருக்கிறது

சட்டப்பேரவை நிகழ்வுகள்: திமுக அரசியல் முன்னிலையைக்  கைப்பற்றியிருக்கிறது – ராம் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில், ஆளுநர் , எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைத்து பதவிப் பிரமாணம் செய்து வைத்த பின்னர்கூட, சட்டமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்படாமல், சென்னைக்கு அருகே உள்ள ஒரு உல்லாசவிடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர் என்று குறிப்பிட்டார் ராம். சட்டமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பு ரகசியமாக நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற கோரிக்கை அபத்தமானது என்று பாஜக தலைவர் சுப்ரமணியம் ஸ்வாமி கூறியிருப்பது பற்றி கருத்து தெரிவித்த ராம், அது சரியானதாக இருக்கலாம், ஆனால் இப்போதைய விநோதமான சூழ்நிலையில் இந்தக் கோரிக்கை எழுந்திருக்கிறது. அதை அரசால் சமாளிக்க முடியவில்லை. நிலைமை கட்டுமீறிப் போனது என்றார். ”வாக்கெடுப்பு ஜனநாயக முறையில் நடந்ததாகச் சொல்ல முடியாது”

 ஆனால் திமுக இந்த வாக்கெடுப்பு நடந்தபோது நடந்து கொண்ட விதத்தை நியாயப்படுத்த முடியாது என்று கூறிய ராம், அது கண்டிக்கப்படவேண்டியதுதான், ஆனால் ஸ்டாலின் இந்த அசம்பாவிதம் குறித்து தானே பொறுப்பேற்றுக் கொண்டு, இதை வேறு விஷயங்களுக்கு கவனத்தை திருப்பியிருக்கிறார். மேலும், இந்த வாக்கெடுப்பிற்குப் பின் திமுக இந்த அரசியல் சூழ்நிலையில், இது வரை ஓ.பன்னீர்செல்வம் பெற்றிருந்த அரசியல் முன்னிலையை கைப்பற்றியிருக்கிறது , இந்த ஆரம்ப தருணங்களில் திமுக அனைவரது கவனத்தையும் பெற்றுவிட்டது என்றார். tamiloneindia

கருத்துகள் இல்லை: