ஞாயிறு, 23 அக்டோபர், 2016

அம்பானி அடித்த 30000 கோடி கமிஷன் .. ராணுவ தளவாடங்கள் வாங்கியதில் மோடி அம்பானிக்கு காட்டிய லாபம்..

Image may contain: 1 person , airplane
UPA அரசாங்கம் 126 ரஃபேல் போர் விமானங்களை வாங்க 79,000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்திருந்தது, அதாவது ஒரு விமானம் ரு.629 கோடி.
இப்பொழுது மோடி அரசு இந்த ஒப்பந்தத்தை மறுநிர்ணயம் செய்துள்ளது. 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க 58,000 கோடி ரூபாய்க்கு புதிய ஒப்பந்தம் செய்துள்ளது, அதாவது இப்பொழுது ஒரு விமானத்தின் விலை ரூ.1611 கோடி.
இந்த மலிவு விலை மூலம் ராணுவ தளவாடங்களில் ஒரு சுக்கும் அனுபவமில்லாத அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்திற்கு மட்டும் 30,000 கோடி லாபமாம். ஏற்கனவே அம்பானி இந்திய வங்கிகளுக்கு தர வேண்டிய நிலுவை பாக்கி ரூ. 1.2 லட்சம் கோடிகள் என்கிறது நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை.

இந்த பரம ஏழைகளை வாழவைக்க தானே ஆட்சிக்கு வந்துள்ளார் மோடி, அது சரி இது பற்றி ஏன் எந்த தொலைக்காட்சியும் விவாதம் நடத்துவதில்லை, ஏன் எந்த பத்திரிக்கையும் புலனாய்வு கட்டுரைகள் வெளியிடுவதில்லை.  முகநூல் பதிவு  ; Muthu Krishnan;

கருத்துகள் இல்லை: