சனி, 23 ஜூலை, 2016

KIckasstorrent அட்மின் போலந்தில் கைது.. KickassTorrents இணையத்தளம் முடங்கியது

U.S Arrests KickassTorrents Owner Artem Vaulin, and World's Biggest Piracy Site Goes Down!
இணையதள டோரண்ட் உலகின் முடிசூடா மன்னனாக வலம் வந்துகொண்டிருந்த, Kickasstorrents-ன் அட்மின், போலந்தில் கைது செய்யப்பட்டதால் அந்த இணையதளம் முடக்கப்பட்டுவிட்டது. நெட்டிசன்கள் எதிர்பார்த்துச் செல்வதை, முனியாண்டி விலாஸ் அன்லிமிடெட் சாப்பாடு மாதிரி வகைவகையாக வைத்து கொடுத்துக்கொண்டிருந்த இணையதளம் Kickasstorrents. படங்கள், கேம்கள், டி.வி. நிகழ்ச்சிகள், பாடல்கள், புத்தகங்கள், சாஃப்ட்வேர்கள் என அங்கு கிடைக்காத டிஜிட்டல் மீடியா ஐட்டமே இல்லை. அப்படியும் இல்லையா? எனக்கு இதுவேண்டும் என்று கேட்டால், ஒரு வாரத்துக்குள் எப்படிப்பட்ட செக்யூரிட்டி சாஃப்ட்வேரையும் உடைத்தெறிந்து, தன்னிடம் கேட்டதைக் கொடுக்கும் Kickasstorrentsன் அட்மின் எப்படிச் சிக்கினார் தெரியுமா?

வாழ்வில் முதன்முறையாக ஒரு செயலை நேர்மையான முறையில் செய்ததால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இண்டர்நெட் போலீஸால் கடந்த 3 ஆண்டுகளாக தேடப்பட்டுவரும் இந்த வெப்சைட்டின் அட்மின், தனது ஆப்பிள் மொபைலிலிருந்து ஒரு சாஃப்ட்வேரை உண்மையான அட்ரஸ், அக்கவுண்ட் நம்பர் கொடுத்து வாங்கியிருக்கிறார். அப்ளிகேஷனை வாங்கிய கையோடு, தனது Kickasstorrents இணையதளத்தின் ஃபேஸ்புக் அக்கவுண்ட்டில் லாக்-இன் செய்தவரை, அன்-இன்ஸ்டால் செய்யும்போது தப்பித்து ஓடும் டேட்டாக்களை பிடிப்பதுபோல் பிடித்துவிட்டனர். உக்ரைன் நட்டைச் சேர்ந்த 30 வயதான அர்டெம் வௌலின் அமெரிக்காவின் பொழுதுபோக்குத் துறையிலிருந்து 1 பில்லியன் டாலர்களைத் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். மற்ற முன்னணி டோரண்ட் இணையதளங்களை குறுகிய காலகட்டத்துக்குள் முந்திச்சென்று, அதன் வகையில் சிறப்பானதாக நின்ற Kickasstorrentsன் அட்மின் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதன் வழக்கமான யூசர்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கின்றனர். புதுசா ஏதாவது ரிலீஸானால், நான் எங்க போவேன்? நான் யாரைக் கேப்பேன்? எனக்கு யார் இருக்கா? எனப் புலம்பியபடி இருக்கும் அதன் யூசர்கள், இண்டர்நெட்டின் கறுப்பு நாளெனச் சொல்லி, அவர் கைதுசெய்யப்பட்ட நாளை துக்க தினமாக அனுசரித்துவருகின்றனர்..minnambalam.com

கருத்துகள் இல்லை: