வெள்ளி, 22 ஜூலை, 2016

வேந்தர் மூவீஸ் மதன் உயிரோடு இருக்கும் சாத்தியம் குறைவு... மோடியின் அல்லக்கை பச்சமுத்து அப்படிப்பட்ட கேடி

வேந்தர் மூவீஸ் மதன் மீது 50 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி வழக்குகள் இருப்பதால், அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியிடப்படவுள்ளதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வேந்தர் மூவிஸ் மதன், கடந்த மே மாதம் 28 ம் தேதி மாயமானார். அவரை கண்டுபிடித்து தரும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில், மதனின் தாயார் தங்கம் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. எஸ்.ஆர்.எம். கல்வி குழுமத்தில் மருத்துவ மாணவச் சேர்க்கைக்காக பல லட்சங்களை வாங்கி ஏமாற்றியதாக ஐ.ஜே.கே. நிர்வாகி பாபு, வேந்தர் மூவிஸ் சுதீர், மதன், எஸ்.ஆர்.எம் நிர்வாகம் ஆகியோர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 50 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி புகார்கள் வந்துள்ளன.


மதன் தொடர்பான வழக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸ் டீம் விசாரிக்கிறது. மதன் தொடர்பான விசாரணை அறிக்கையை, காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இதுவரை நடந்த விசாரணை நீதிமன்றத்துக்கு திருப்தியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் மதன் மாயமாகி ஒரு மாதத்துக்கு மேலாகுவதாலும், அவர் மீது 50 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி புகார்கள் இருப்பதாலும் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க போலீஸ் முடிவு செய்துள்ளது. மதனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து விட்டால் அவரது புகைப்படம் உள்ளூர், வெளிநாடுகளில் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டு விடும். இதன்பிறகு மதனால் எங்கும் தப்பித்துச் செல்ல முடியாது. இதற்காகன நடவடிக்கையை எடுக்க போலீஸார், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறார்கள். இது தொடர்பான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியிடப்படவுள்ளதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் போலீஸாரின் இந்த முடிவுக்கு மதனை கண்டுபிடித்துத் தர ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞர் இன்ஃபென்ட் தினேஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "மதன் உயிருடன் இருக்கிறரா என்ற விவரம் கூட இதுவரை தெரியவில்லை. இந்த வழக்கில் மதன் மூன்றாவது குற்றவாளிதான். அவரை மட்டும் ஏன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். மேலும், பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், எஸ்.ஆர்.எம் கல்வி குழுமத்தில் உள்ள அதிகாரிகளை சந்தித்தப் பிறகு அவர்கள் கூறியதன் பேரிலேயே மதனை சந்தித்துள்ளனர். மதனைப் போல இந்த வழக்கில் தொடர்புடைய எஸ்.ஆர்.எம் குழுமத்தில் உள்ளவர்களும், ஐ.ஜே.கே கட்சி நிர்வாகிகள் சிலரும் தலைமறைவாகவே இருக்கின்றனர். அவர்களை முதலில் தேடப்படும் குற்றவாளியாக போலீஸார் அறிவிக்கட்டும்" என்றார்.

மதனின் முதல் மனைவி சிந்துக்கு நீதிமன்றம் கடிவாளம்

இதனிடையே மதனின் தாயார் தங்கத்தின் வீட்டுக்குள், மதனின் முதல் மனைவி சிந்துவோ அல்லது அவரது தரப்பினரோ நுழைந்தால் அவர்களை கைது செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேந்தர் மூவிஸ் மதன், மாயமாகி ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்ட நிலையில், அவரை கண்டுப்பிடித்து தரும்படி அவரது தாயார் தங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், போரூர், சமயபுரத்தில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டுக்குள் சிலர் அத்துமீறி நுழைந்து இருப்பதாக மதுரவாயல் போலீசில் தங்கம் புகார் கொடுத்தார். அந்த புகாருக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து தங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி பிரகாஷ், " மதனின் முதல் மனைவி சிந்து அல்லது அவரது தரப்பு நபர்கள் வீட்டுக்குள் நுழைந்தால், அவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து கைது செய்யலாம்"  என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அதோடு அவர்களை குண்டர் சட்டத்திலும் கைது செய்யலாம் என்று நீதிபதி பிரகாஷ் தெரிவித்தார்.

இதுகுறித்து தங்கம் தரப்பு வழக்கறிஞர் இன்பெஃன்ட் தினேஷ் கூறுகையில், " இந்த வீடு தங்கத்தின் பெயரில் உள்ளது. தங்கத்துக்கு மதனைப் போல இன்னும் இரண்டு பேர் உள்ளனர். இதனால் இந்த வீட்டிற்குள் மதன் மாயமாகியுள்ள சமயத்தில் சிந்து தரப்பினர் நுழைவது தவறு. மேலும், மதனுக்கும், சிந்துவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு, இருவரது விவகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதனால் மதனின் பெயரைப் பயன்படுத்தி தங்கத்தின் சொத்துக்கள் மீது சிந்து உரிமை கோர முடியாது.
எனவேதான், இனிமேலும் இந்த வீட்டுக்குள் சிந்து தரப்பினர் நுழைய முயன்றால் காவல்துறை நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தவர்களை காவல்துறை மூலம் வெளியேற்றவும் நீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி காவல்துறையினருடன் சென்று தங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் அந்த வீட்டை கொண்டு வந்துள்ளோம்" என்றார்.  vikatan.com

கருத்துகள் இல்லை: