சனி, 23 ஜூலை, 2016

என் மகனை சுட்டுக் கொல்லுங்கள்.. படுகொலை செய்யப்பட்ட பாக்.மாடல் அழகி குவான்டீலின் தந்தை ஆவேசம்!

 Qandeel's father wants son to be 'shot on sight'இஸ்லாமாபாத்: சகோதரியை ஆணவக்கொலை செய்த தன் மகனை சுட்டு கொல்ல வேண்டும் என்று பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய பிரபல மாடல் அழகி குவான்டீல் பலூச்சின் தந்தை கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் செலிபிரிட்டி மாடல் அழகியாக வலம் வந்தவர் குவாண்டீல் பலூச். இவர் கடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடித்தால் நிர்வாண நடனம் ஆடத்தயாராக இருப்பதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.


தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து சலசலப்பை உருவாக்கி வந்தார். மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டனாக இருந்த ஷாஹித் அப்ரிதியைத் திட்டுவது, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பது என தொடர்ந்து செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் ஜூலை 14 ஆம் தேதி அவரது வீட்டில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரித்ததில், குடும்பத்திற்கு அவமானம் ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டதாக அவரது அண்ணன் வாசிம், பலூச்சை ஆணவக் கொலை செய்தது தெரியவந்தது.
தற்போது வாசிம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொலை செய்வதற்கு முன்பு அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டதாகவும், இதனால் தான்தான் கொலை செய்தேன் என்று தனது தங்கைக்குத் தெரியாது என்றும் அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இந்நிலையில் குவாண்டீலின் தந்தை அன்வர் ஆசிம், சகோதரியை ஆணவக்கொலை செய்த தன் மகனை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில் "அவனை பார்த்தவுடன் சுட்டுக்கொல்ல வேண்டும். எங்களுக்கு போதை மருந்தை கொடுத்துவிட்டு, என் மகளை கொலை செய்து விட்டான். அவளை கழுத்தை நெரித்த போது எங்களை கூப்பிட்டு இருப்பாள் எங்களுக்கு கேட்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.  /tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: