சனி, 23 ஜூலை, 2016

பன்னீரு பட்ஜெட் : கனிவு , இரக்கம்,தியாகம், ஈகை தங்கமே மக்களுக்காக துடிக்கின்ற தெய்வமே....இதையெல்லாம் நம்புறாரே ஜெயலலிதா

2016-17ம் நிதியாண்டுக்கான திருத்திய பட்ஜெட்டை சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம். தனது பட்ஜெட் உரையைத் தொடங்கிய அமைச்சர் பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஜெயலலிதாவை கவிதை வடிவில் புகழ்ந்துரைத்தார்.
“கனிவு , இரக்கம், ஈகை இலக்கணமாக , மக்களுக்காக துடிக்கின்ற மனித தெய்வமே, மக்களால் நான் , மக்களுக்காகவே நான் என்ற தியாகத்தில் வாழும் சொரூபமே, புடம் போட்ட தங்கமாக புனித ஜார்ஜ் கோட்டையில் 6-ம் முறை தமது ஆற்றல் கரங்களில் செங்கோல் ஏந்தி ஆட்சி நடத்தும் அம்மா என்ற சிங்கமே , 10 கோடி தமிழர்களின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் பத்திரை மாத்து தங்கமே , வீரத்திருமகளே , திருப்புமுனை உருவாக்கிய சரித்திர புத்தகமே சாதனை பெட்டகமே என்னை நம்பி பல பொறுப்புகள் தந்துள்ள அம்மாவுக்கு எத்தனை பிறவி எடுத்தாலும் உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை.

சட்டசபை தேர்தலில் அம்மாவுக்கு மகத்தான ஆதரவு அளித்து 32 ஆண்டுகளுக்கு பிறகு, தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியளிக்க வாய்ப்பு தந்தனர் தமிழக மக்கள். அந்த தமிழக மக்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்பேன் என்று அம்மா கூறினார். எனது நன்றிக்கடனை செயல் மூலம் காட்டுவேன் என்றும், தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றுவேன் என்றும், தேர்தல் வெற்றி செய்தி வந்ததுமே, அம்மா தெரிவித்தார். அம்மா அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றதும் தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றும் விதமாக 5 முக்கிய அரசாணைகளை வெளியிட்டு, தனது வாக்கை நிறைவேற்றியுள்ளார்”.  thetimestamil.com

கருத்துகள் இல்லை: