புதன், 10 பிப்ரவரி, 2016

நடிகர் சல்மான் கான் விடுதலையை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றில்

salman feb 10கார் விபத்து வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.பாதிக்கப்பட்ட குடும்பத்தின் இந்த நடவடிக்கை யானது, வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள விசாரணையின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது. மும்பையில் கடந்த 2002ம் ஆண்டு நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது நடிகர் சல்மான் கானின் கார் மோதியது. இதில் ஒருவர் பலியானார், 4 பேர் காயமடைந்தனர். போதையில் காரை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியதாக சல்மான் கான் மீது தொடரப்பட்ட இவ்வழக்கின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை ஐகோர்ட்டில் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மகாராஷ்டிர அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.  பணக்காரன் ஏழையை காரால் அடித்து கொல்வது ஒரு கவுரவமான காரியமாக உருமாறி விட்டதோ என்ற சந்தேகம்....கேரளா கிங் பீடி அதிபர், அம்பானி மகன், சல்மான் கான் இன்னும் பல முறைப்பாடுகள் வெளிச்சத்துக்கே வருவதில்லை...

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் வெள்ளிக்கிழமை (12-ம் தேதி) நடைபெற உள்ள நிலையில், வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, சல்மான் கான் விடுதலையை எதிர்த்து, இந்த கார் விபத்தில் பலியானவரின் குடும்பத்தினர் இன்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். பலியானவரின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .  aanthaireporter.com

கருத்துகள் இல்லை: