செவ்வாய், 20 ஜனவரி, 2015

சீனாவின் அதிர்ச்சி ? அருணாச்சல் பிரதேஷ் இந்தியாவின் ஒரு பகுதியாமே?

அருணாசலப் பிரதேச மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதி என்று ஜப்பான் கூறியதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் இந்தியாவுக்கு வந்த ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் புமியோ கிஷிடா, இந்திய வடகிழக்கு மாநிலங்களில் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்ய ஜப்பான் தயாராக இருப்பதாகவும், ஆனால், அருணாச்சலப் பிரதேசத்தில் மட்டும் முதலீடு செய்ய முடியாது என்றும் கூறியது.
மேலும், அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதியாகவே ஜப்பான் பார்க்கிறது. எனினும், அப்பகுதியில் முதலீடு செய்யும் திட்டம் இல்லை என்று கூறியிருந்தார்.

இதற்கு சீனா தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகப் பேச்சாளர் இது குறித்து காட்டமாகக் கூறியிருப்பதாவது, ஜப்பான் தனது வேலையை மட்டும் செய்யட்டும், இந்தியா - சீனா உறவுக்குள் தலையிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார் dinamani.com

கருத்துகள் இல்லை: