ஞாயிறு, 18 ஜனவரி, 2015

ஜெயலலிதா Flashback :என்னை அரசியலில் இருந்து ஒழித்துகட்ட எம்ஜியார் தன்னால் முடிந்ததை எல்லாம் செய்கிறார்!

1.1.1989 ‘மக்கள் குரல்’ இதழில், ஜெயலலிதாவைப் பற்றி, எம்.ஜி.ஆர். கூறும்போது, “அம்முவின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. எதையோ நினைத்து அம்முவை அரசியலில் ஈடுபடுத்தினேன். பிள்ளையார் பிடிக்கப் போய் அது குரங்காய் முடிந்துவிட்டது. சூதும், வாதும், வஞ்சகமும், சூழ்ச்சியும் கற்ற இந்த அம்மு எனக்கே உலை வைக்கிறாள். 

எம்.ஜி.ஆருக்கு தற்போது புகழ் மாலை சூடும் ஜெயலலிதா, அவர் உயிரோடு இருந்தபோது, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு சேலம் கண்ணன் மூலமாக ஒரு கடிதம் அனுப்பியது தமிழ்நாட்டு மக்களுக்கு மறந்து விட்டதா என்ன? ஜெயலலிதா அப்போது தன் கைப்பட எழுதிய அந்தக் கடிதம் “மக்கள் குரல்” ஏட்டிலேயே அப்போது “பிளாக்” செய்து வெளியிடப்பட் டிருந்ததே?

அதாவது, “மிகுந்த செல்வாக்குடன் நான் (ஜெயலலிதா) பிரபலம் அடைந்திருப்பதை பார்த்து முதலமைச்சர் (எம்.ஜி.ஆர்) மிகவும் பொறாமைப் படுகிறார்.
இதுதான் இங்கு நடைபெறும் ஒவ்வொரு செயலுக்கும் மூலகாரணம். நான் மிகவும் பிரபலம் அடைந்துள்ளதை அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.
எனவே, அரசியலில் இருந்தும், பொதுவாழ்வில் இருந்தும் என்னை ஒழித்துக் கட்ட தன்னால் முடிந்ததையெல்லாம் அவர் (எம்.ஜி.ஆர்) செய்து வருகிறார்” என்று எம்.ஜி.ஆரைப் பற்றி எழுதினார்.

அது மாத்திரமல்ல; அதே கடிதத்தில், (எனக்கு உரிய முக்கியத்துவம் தர விரும்பாத எம்.ஜி.ஆர்., என்னை அமைச்சரவையில் சேர்க்கவும் விரும்பவில்லை. அவரை எதிர்க்க இங்கு யாருக்கும் தைரியமில்லை. ஏனென்றால் அவரில்லாவிட்டால் மற்றவர்கள் எல்லாம் பூஜ்யங்கள்) என்றெல்லாம் எழுதியவர், இன்றைக்கு தானே முன் வந்து சென்னை விமான நிலையத்திற்கு அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரைச் சூட்ட வேண்டுமென்று கேட்க முன் வந்திருப்பது கண்டு, பாசத்தாலா அல்லது பதவி ஆசையினாலா எனத் தமிழ் மக்கள் சந்தேகிப்பது இயல்பானதுதானே?  http://nakkheeran.in/Users/frmNews.aspx?N=136251

கருத்துகள் இல்லை: