ஞாயிறு, 11 ஜனவரி, 2015

மதுரையில் 15 கிராமங்கள் 48 Km நீண்ட கிரானைட் கோட்டை கண்டுபிடிப்பு ! 26 ஆயிரம் விளைநிலங்கள் சுவாகா !

இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், இங்கு நடைபெற்ற யாவும் அதிகாரிகள்,மற்றும் அரசியல்வாதிகள் உதவி இல்லாமல் எதுவுமே நடைபெற முடியாது. இதில் சம்பாரித்த பணம் எல்லாமே இங்குதான் சுற்றிக்கொண்டு இருக்கிறது. இந்த அரசும்,இதற்கு முந்தய அரசும் தானே வெகு காலமாய் ஆண்டு கொண்டு இருக்கிறது. அதோடு இந்த இரண்டு அரசில் அனைத்து அதிகாரிகளும் இதில் அடங்குவார்கள் 

எருமாபட்டியில் துவங்கி செம்மினிப்பட்டி, புறாக்கூடு மலை, இ.மலம்பட்டி, கீழையூர், நாவினிப்பட்டி, பதினெட்டாம் குடி, கொட்டக்குடி, திருவாதவூர், இடையபட்டி, கருப்புக்கால், இளங்கிபட்டி, சிவலிங்கம், ராஜாக்கூர், கருப்பாயூரணி, கூடக்கோவில் வரை 48 கி.மீ., நீளத்தில் ஆங்காங்கே கிரானைட் கற்களை அடுக்கி கோட்டை எழுப்பி யாரும் உள்ளே புகுந்து விடாதபடி தடுத்து தனி சாம்ராஜ்ஜியம் நடத்தியதும் சகாயம் விசாரணையில் அம்பலமானது. இதனால் 26 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் பாழானது.
மேலூர்:மதுரை மாவட்டம் மேலூரில் 48 கி.மீ., நீளத்தில் கிரானைட் கற்களை அடுக்கி 'கிரானைட் கோட்டை' அமைத்தது ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் விசாரணையில் நேற்று அம்பலமானது. கிரானைட் முறைகேடு குறித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் நேற்று மதுரை மாவட்டம் இடையபட்டியில் விசாரணை நடத்தினார். 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியசூரியனேந்தல் கண்மாயில் 2009 முதல் 2011 வரை மீன் பிடிக்க பி.கே.மூர்த்தி என்பவர் ரூ.30 ஆயிரத்துக்கு டெண்டர் எடுத்தார். மீன் குஞ்சுகள் விடப்பட்ட நிலையில், கண்மாயையொட்டி கிரானைட் குவாரி தனியாரால் துவக்கப்பட்டது. கண்மாயில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்து கண்மாயை மூடிவிட்டனர். இடையபட்டி கல்லாங்குத்து கண்மாய் அருகே ஒருவர் இரண்டு ஏக்கர் பட்டா நிலத்தில் கிரானைட் கற்கள் அறுக்க 1995ல் அனுமதி பெற்றார். பின் கண்மாயில் 75 ஏக்கரில் கற்களை எடுத்தது சகாயம் விசாரணையில் தெரிந்து. மன்னர் கோட்டையா:சகாயம் கூறியதாவது: இது என்ன மன்னர் கோட்டையா? கண்மாயின் பவுண்டரி கற்கள் எங்கே? அரசு சொத்து ரூ.பல நூறு கோடி மதிப்புள்ள கற்களை வெட்டி எடுத்து சென்றுள்ளனர். இந்தளவிற்கு முறைகேடு நடந்திருக்கிறது. அதுகுறித்து யாரும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.
இந்த இடத்தை பார்க்கும் போது கற்பனைக்கு எட்டாத ஏதோ ஒரு உலகத்தில் இருப்பது போல் அல்லவா இருக்கிறது. இந்த கண்மாய் நீரை பருகிய கால்நடைகள் தண்ணீர் குடிக்க எங்கே போகும்? என அதிகாரிகளிடம் கேட்டார்.கிரானைட் குவாரிகளை எடுத்தவர்கள் பூமியின் மறு பக்கத்தை தொடும் அளவிற்கு பள்ளம் தோண்டி கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததை இடையபட்டி குவாரி ஒன்றில் பார்த்து சகாயத்தின் தலை சுற்றியது. அந்த குவாரியில் கிரானைட் கற்களை லாரியில் எடுத்து வருவதற்காக பள்ளத்தில் ஏழு இடங்களில் கொண்டை ஊசி வளைவுகள் இருப்பதும் சகாயத்திற்கு கூடுதல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.



48 கி.மீ., 'கிரானைட் கோட்டை':



மேலூர் எருமாபட்டியில் துவங்கி செம்மினிப்பட்டி, புறாக்கூடு மலை, இ.மலம்பட்டி, கீழையூர், நாவினிப்பட்டி, பதினெட்டாம் குடி, கொட்டக்குடி, திருவாதவூர், இடையபட்டி, கருப்புக்கால், இளங்கிபட்டி, சிவலிங்கம், ராஜாக்கூர், கருப்பாயூரணி, கூடக்கோவில் வரை 48 கி.மீ., நீளத்தில் ஆங்காங்கே கிரானைட் கற்களை அடுக்கி கோட்டை எழுப்பி யாரும் உள்ளே புகுந்து விடாதபடி தடுத்து தனி சாம்ராஜ்ஜியம் நடத்தியதும் சகாயம் விசாரணையில் அம்பலமானது. இதனால் 26 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் பாழானது.



அளவீடு செய்ய உத்தரவு:



கீழவளவில் பி.ஆர்.பி. கிரானைட்ஸ் நிறுவனத்திற்கு 2011 முதல் 2021 வரை கிரானைட் கற்கள் வெட்டி எடுக்க அனுமதி பெறப்பட்டது. இதற்கு தற்போது 'சீல்' வைக்க பட்டுள்ளது. அங்குள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்குவதால் அளவெடுக்க இயலவில்லை. அங்கு அளவீடு செய்ய சகாயம் உத்தரவிட்டார். கருப்பக்கால் ஊரணியில் 2003 முதல் 2009 வரை கிரானைட் கற்கள் வெட்டி எடுக்க அனுமதி அளித்தது குறித்து புவியியல் மற்றும் சுரங்கத்துறையிடம் அறிக்கை தாக்கல் செய்ய சகாயம் உத்தரவிட்டார். கீழவளவில் இன்றும் நாளையும் சகாயம் விசாரணை நடத்துகிறார். இதை 'தண்டோரா' மூலம் அறிவிக்கும்படி வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டார்.



முறைகேடு நிலம் அரசுடமை:



நீர்வள பாதுகாப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் சோமசுந்தரம்: கிரானைட் கற்களை ஏலம் விட்டு கஜானாவில் சேர்க்க வேண்டும். இதற்காக ஓய்வு நீதிபதி சந்துரு தலைமையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நரேஷ்குப்தா, அன்சுல்மிஸ்ரா, உதயசந்திரன், ஆசிஷ்குமார், பாலகிருஷ்ணன் எஸ்.பி., ஆகியோர் கொண்ட குழு அமைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.>உளவாளி யார்:கருப்பக்கால் ஊரணியில் விசாரணை நடத்திய சகாயம், 'ஊர்க்காரர்கள் யாரும் வந்திருக்கிறார்களா?,' என கேட்டார். யாரும் வரவில்லை என தெரிந்தது. பாதிக்கப்பட்ட கிராமத்தினரே தகவல் தெரிவிக்க வர இயலாதது ஏன்? வேறெதும் காரணம் உண்டா? உள்ளூர்காரர் யார்? உளவாளி யார்? தகவல் கொடுப்பவர் யார்? தகவல் கொடுக்காதவர் யார்? என தெரியவில்லை. ஆனால் இங்கு நடப்பவை குறித்து உடனுக்குடன் தகவல் மட்டும் போகிறது,'' என்றார்.இடையபட்டியில் தன்னை ரகசியமாக மொபைல் போனில் படம் எடுத்தவரை சகாயம் கண்டுபிடித்தார். மர்மநபரிடம் போனை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரிக்கையில் அவர் 'சீல்' வைக்கப்பட்ட குவாரியின் வாட்ச்மேன் என தெரிந்தது. தினமலர்.com

கருத்துகள் இல்லை: