
அதில், மோடி அரசில் 19 அமைச்சகங்கள் ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளன. 5 அமைச்சகங்கள் ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளன. பிரதமர் அலுவலகமும் டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் கணக்கு வைத்துள்ளது. மத்திய அரசின் முறையான அனுமதி இல்லாமல் எந்த ஒரு ஆவணத்தையும் இந்தியாவை விட்டு வெளியே எடுத்துச் செல்ல முடியாது என்கிறது பொது ஆவண சட்டம். இதனால் அரசாங்கம் இ மெயில்களைப் பயன்படுத்துவது கூட சட்டப்படி தவறு. மேலும் இந்த சமூக வலைதளங்கள், இ மெயில்களின் சர்வர்கள் அனைத்தும் வெளிநாட்டில்தான் இருக்கின்றன. அப்படியான நிலையில் நாட்டின் அதிகாரப்பூர்வ ஆவணத்தை எப்படி மற்ற நாடுகளுக்கு பரிமாறிக் கொள்ள முடியும்?
என்று குறிப்பிட்டிருந்தார்.இதனிடையே மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர் சஞ்சய் ஜெயின் வாதிடுகையில், தேசிய இ மெயில் கொள்கை ஒன்றை மத்திய அரசு இறுதி செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த 15-ந் தேதி அனைத்து துறை செயலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இது தற்போது அமைச்சரவையின் ஒப்புதலுக்காக தயார் நிலையில் உள்ளது என்று குறிப்பிட்டார். nakkheeran,in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக