வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

வைகோவிற்கு ஹாட் புரோப்பிளம் ? மருத்துவ மனையில் அனுமதி !

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 வைகோ சென்னையில் இருந்து கடலூருக்கு இன்று மதியம் காரில் சென்று கொண்டிருந்தார்.  மதியம் 12 மணியளவில்  கிழக்கு கடற்கரை சாலை வழியாக  கோவளம் அருகே சென்றபோது வைகோவிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதுடன் லேசான மயக்கமும் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டார்.
அங்கு அவரது உடலை டாக்டர்கள் பரிசோதித்தனர். இதுகுறித்து மருத்துவமனை மருத்துவர்கள் பிரதீப் நாயர், ராஜசேகர் ஆகியோர் கூறுகையில், ‘‘வைகோவின் உடலை பரிசோதித்ததில் குறைந்த ரத்த அழுத்தம் அவருக்கு இருந்தது. மேலும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கிறது. அவர் 2 நாட்கள் இங்கு தங்கி சிகிச்சை பெற வேண்டும். அவரது உடல்நிலை நன்றாக உள்ளது’’ என்றனர்.

வைகோ திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி பரவியதால்   ம.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அவரது உடல் நலம் குறித்து கேட்டறிவதற்காக மருத்துவமனை முன்பாக குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. dinamani.com

கருத்துகள் இல்லை: