புதன், 28 மே, 2014

மத்திய அமைச்சரவையில் பதவி கிடைக்காத வாரிசு பட்டியல் !

அரசியல் தலைவர்களின் வாரிசுகள் முதல்வராக, அமைச்சர்களாக
பதவியேற்பது இந்தியாவில் வழக்கமான ஒன்று. கடந்த மன்மோகன் சிங் அமைச்சரவையில் சச்சின் பைலட், அகதா சங்மா, வாசன், ஜோதிராதித்யா சிந்தியா, புரந்தேஸ்வரி, மிலிந்த் முரளி தியோரா ஆகியோர் இடம் பெற்றனர். ஆனால் இம்முறை மோடி அமைச்சரவையில், ஒரே ஒரு வாரிசுக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.தேர்தல் பிரசாரத்தின் போது, நரேந்திர மோடி, ராகுலை 'இளவரசர்' என அழைத்தார். வாரிசின் கையில் தான் ஆட்சி நடக்கிறது என்றும் கடுமையாக விமர்சித்தார். சொன்னது போலவே வாரிசு யாருக்கும் அமைச்சரவையில் மோடி இடமளிக்கவில்லை.யார் அந்த ஒரே வாரிசு: முன்னாள் கப்பல்துறை அமைச்சர் வேத்பிரகாஷ் கோயல் மகன், பியூஸ் கோயல், நிலக்கரி மற்றும் எரிசக்தி துறை இணையமைச்சராக பதவியேற்றுள்ளார். வாரிசாக இருந்தாலும் 49 வயதான இவர், 27 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறார்.


அமைச்சர் பதவி கிடைக்காத வாரிசுகள்
1) வருண் (மேனகா மகன்)
2) துஷ்யந்த் சிங் (ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே மகன்)
3) அனுராக் தாகூர் (முன்னாள் இமாச்சல் முதல்வர் பிரேம் குமார் மகன்)
4) அபிசேக் (சத்தீஸ்கர் முதல்வர் ராமன்சிங் மகன்)
5) ராஜ்பிர் (உ.பி., முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் மகன்)
6) பூணம் மகாஜன் (பிரமோத் மகாஜன் மகள்)
7) பர்வேஷ் (முன்னாள் டில்லி முதல்வர் சாகிப் சிங் மகன்)
8) சிராஹ் (ராம் விலாஸ் பஸ்வான் மகன்) dinamalar.com

கருத்துகள் இல்லை: