திங்கள், 26 மே, 2014

வேலூரில் கரகாட்ட பெண் வீட்டில் ரூ.4 கோடி, நகை பறிமுதல்

வேலூர்: வேலூர் இந்திரா நகரை சேர்ந்தவர் மோகனாம்மாள். இவர் காட்பாடி சென்னை, பெங்களூர், ஆந்திராவுக்கு போலீசார் விரைந்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் மோகனாம்மாளின் தம்பி சரவணன் (35) தேடப்படும் குற்றவாளி என்பது தெரிய வந்தது. சரவணன் கொள்ளையடித்து கொண்டு வரும் நகைகளையும், பணத்தையும் யாருக்கும் சந்தேகம் வராதவாறு பதுக்கி வைக்கவே மோகனாம்மாள் காட்பாடியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் மோகனாம்மாளுக்கும் இந்து இயக்க பிரமுகர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகிய தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். தீவிரவாத கும்பல்கள் தங்கள் காரியங்களுக்காக செலவிடும் பணத்தை மோகனாம்மாள் போன்ற சந்தேகம் வராத நபர்கள் மூலம் கையாளலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு உள்ளது.
இதுதவிர திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் கடத்தும் கும்பலுடனும் மோகனாம்மாளுக்கு தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். எந்த தகவலையும் உறுதிப்படுத்தாத போலீசார், மோகனாம்மாள் மற்றும் அவரது தம்பி சரவணன், மோகனாம்மாள் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டு உரிமையானர் ஜமுனா ஆகியோரை பிடித்தால்தான் உண்மையான தகவல்கள் வெளியாகும் என்று கூறினர்.
தாராபடவேடு கோவிந்தராஜ முதலியார் தெருவில் ஜமுனா (50) என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். மோகனம்மாள் கரகாட்ட குழு நடத்தி வருகிறார். இவரது வீட்டில் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாக மத்திய வருமானவரி துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வருமான வரித்துறையினர் மற்றும் போலீசார்  நேற்று காலை 6 மணியளவில் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது வீட்டில் யாரும் இல்லை. இரவு 8 மணியளவில் உள்ளே சென்று சோதனையில் ஈடுபட்டனர். அங்கு அட்டைப்பெட்டிகளில் கட்டுக்கட்டாக  ரூ.4 கோடியே 4 லட்சத்து 73 ஆயிரத்து 500 இருந்தது. மேலும் 73 சவரன் தங்க நகைகளையும் போலீசார் கைப்பற்றினர். தலைமறைவான மோகனாம்மாளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
tamilmurasu.org

கருத்துகள் இல்லை: