வியாழன், 29 மே, 2014

முரளி மனோகர் ஜோஷி பாதுகாப்பு அமைச்சர் ஆகிறார் ! born in a Brahmin family

மூத்த பாரதிய ஜனதா கட்சி தலைவரான முரளி மனோகர் ஜோஷி நேற்று
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அமைச்சராக நியமிக்கப்படலாம் என அரசல் புரசலாக தகவல் கசிந்துள்ள நிலையில் அவர் மோடியை சந்தித்து பேசியுள்ளது அதனை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மோடியின் அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு துறை முழு நேர அமைச்சருக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது.2 g ஸ்பெக்ட்ரம் மூலம் 1760000 கோடி  இலாபம் வந்திருக்கும் என்று ஜேபிசி மூலம் கதை  அளந்து  பின் பம்மிக்கொண்டே இருக்கும் நேரமையாளன் இவரே ம்ம்ம் ஆனால் பார்பன உயர்ஜாதி மீடியாக்கள் எல்லாம் அதையே திருப்பி திருப்பி ரிப்பீட் அடிச்சு என்னன்ன கூத்தெல்லாம் நடக்கிறது


ஜோஷியை பாதுகாப்பு துறை அமைச்சராக நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. தற்போது இத்துறை நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் உள்ளது. ஜோஷிக்கு ஆர்.எஸ்.எஸ்.சின் பரிபூரண ஆதரவும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மோடியை சந்தித்து பேசுவதற்கு முன்னதாக பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்கையும் ஜோஷி சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் மோடியின் கீழ் செயல்பட ஒப்புக்கொண்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன maalamalar.com

கருத்துகள் இல்லை: