வியாழன், 29 மே, 2014

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடுக்கு அனுமதியில்லை மத்திய அரசு- !

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா இன்று
வெளியிட்ட அறிக்கை:சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை  அனுமதிக்கக்கூடாது என இந்திய முழுவதும் வணிகர்கள் கடுமையான போராட்டங்களை நடத்தியும் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு பிடிவாதமாக  அலட்சியப்படுத்தியது.  தற்போது காங்கிரஸ் மிகப்பெரும் தோல்வியை சந்தித்ததற்கு சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்த காரணமும் ஒன்று  என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் பொறுப்பேற்ற வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதில்லை என முதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான வணிக  குடும்பங்கள் சார்பிலும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பிலும், அகில இந்திய வணிகர் சம்மேளனம் சார்பிலும் நரேந்திர மோடி மற்றும் நிர்மலா  சீதாராமனுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.மேலும், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தபடி வணிகர்களை பாதிக்கும் சட்டமான உணவு பாதுகாப்பு மற்றும்  தரநிர்ணயச்சட்டம் முழுமையாக மாற்றம் செய்தல் அல்லது ரத்து செய்தல் அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். - See tamilmurasu.org

கருத்துகள் இல்லை: